தாலமி வம்சம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தாலமி வம்சம் (Ptolemaic dynasty) (ஆட்சிக் காலம்:கிமு 305 - கிமு 30) கிரேக்க மாசிடோனியாவின் பேரரசர் அலெக்சாந்தர் கிமு 323-இல் மறைவின் போது அவருக்கு நேரடி வாரிசுகள் இல்லாதபடியால் நடைபெற்ற வாரிசுரிமைப் போட்டியின் காரணமாக கிரேக்கப் பேரரசை, அவரது நண்பர்களும், தலைமைப் படைத்தலைவர்களும் பிரித்துக் கொண்டு ஆண்டனர். அலெக்சாந்தரின் உறவினரும், கிரேக்க தலைமைப் படைத்தலைவுருமான தாலமி சோத்தர் பண்டைய எகிப்து மற்றும் கானான் மற்றும் சைப்பிரஸ் உள்ளிட்ட தாலமி பேரரசுக்கு கிமு 305 முதல் பேரரசர் ஆனார்.[1][2][3][4][5] இவரது பெயரால் தாலமி வம்சம் துவங்கியது. கிமு இரண்டாம் பத்தாண்டுகளில் எழுச்சியுற்ற உரோமைப் பேரரசு காலத்தில், தாலமி வம்சத்தவர்களின் கட்டுப்பாட்டிலிருந்த கானான், சைப்பிரஸ், அசிரியா போன்ற பண்டைய அண்மைக் கிழக்கு பகுதிகள் உரோமைப் பேரரசின் கீழ் சென்றது.
இவ்வம்சத்தின் இறுதியில் பண்டைய எகிப்தை ஆண்ட பதினைந்தாம் தாலமி மற்றும் அவரது அன்னை ஏழாம் கிளியோபாட்ராவுடன் கிமு 30-இல் தாலமி வம்சத்தவர்களின் ஆட்சி முடிவுற்றது. தாலமி பேரரசின் எகிப்து, உரோமைப் பேரரசின் கீழ் ஒரு மாகாணமாக மாறியது. தாலமி வம்சத்தினர் பண்டைய எகிப்தை கிமு 305 முதல் கிமு 30 முடிய 275 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி செய்தனர்.
பண்டைய எகிப்தை, கிரேக்கர்களான தாலமி வம்சத்தினர் ஆண்டாலும், பண்டைய எகிப்திய அரசமரபுகள் கடைபிடித்த பண்பாட்டின் அடிப்படையில் ஆட்சி செய்து, எகிப்தியக் கடவுள்களை வழிப்பட்டனர். பண்டைய எகிப்திய பார்வோன்களைப் போன்று, இந்த கிரேக்க இன தாலமி வம்சத்தினரும், ஆட்சிக் கட்டிலில் ஏறியவுடன் தங்களை பார்வோன்கள் என அழைத்துக் கொண்டனர். மேலும் தங்களுக்கான கல்லறைப் பிரமிடுகளை மிகச்சிறிய அளவில் கட்டிக் கொண்டனர்.
பண்டைய எகிப்திய அரசமரபுகள் போன்றே தாலமி வம்சத்தவர்களும், ஆட்சி நலனுக்காக சொந்த சகோதரியைத் திருமணம் செய்து வழக்கம் கொண்டிருந்தனர்[6]. பெண்கள் ஆட்சி பீடம் ஏறுவதற்கு தகுதியற்று இருப்பினும், குழந்தைப் பருவ மகன் அல்லது சகோதர அரசினின் காப்பாட்சியராக எகிப்தை ஆண்டனர். எகிப்தை ஆண்ட பெண் அரசிகளில் குறிப்பிடத்தக்கவர் ஏழாம் கிளியோபாட்ரா, ஆட்செப்சுட்டு நெஃபர்டீட்டீ மற்றும் நெபர்தரி ஆவர்.
கிளியோபாட்ரா தன்னைவிட இளவயதுடைய தனது சிறுவயதினரான இரண்டு சகோதரர்களை மணந்து, இரண்டு முறை அவர்களின் காப்பாட்சியாரக எகிப்தை ஆண்டார். மேலும் கிளியோபாட்ரா உரோமைப் படைத்தலைவர் ஜூலியஸ் சீசர் மூலம் சிசேரியன் எனும் குழந்தையைப் பெற்றார். பின்னர் தனது சகோதரர்களைக் கொன்ற கிளியோபாட்ரா, தனது குழந்தை மகன் சிசேரியனை அரியனையில் அமர்த்தி, சிசேரியனின் காப்பாட்சியராக எகிப்தை ஆண்டார்.
பின்னர் உரோமைப் படைத்தலவர் மார்க் ஆண்டனி-ஏழாம் கிளியோபாற்றா காதல் வாழ்க்கையால், கொதித்தெழுந்த உரோமைப் படைத்தலைவர் அகஸ்ட்டஸ் கிமு 30-இல் எகிப்தைக் கைப்பற்றி, எகிப்தை உரோமைப் பேரரசின் ஒரு மாகாணமாகச் செய்தார். இதனால் கிமு 30-இல் தாலமி வம்சம் முடிவுற்றது. தாலமி வம்சத்தினர் தாலமி பேரரசை கிமு 305 முதல் கிமு 30 வரை தொடர்ச்சியாக 275 ஆண்டுகள் ஆண்டனர்.
Remove ads
தாலமி வம்ச ஆட்சியாளர்கள்


- தாலமி சோத்தர் -ஆட்சிக் காலம் கிமு 303 – 282
- இரண்டாம் தாலமி - கிமு 285 – 246
- மூன்றாம் தாலமி - கிமு 246 – 221
- நான்காம் தாலமி - கிமு 221 – 203 - (சகோதரி & மனைவி முதலாம் கிளியோபாட்ரா)
- ஐந்தாம் தாலமி - கிமு 203 – 181
- ஆறாம் தாலமி - கிமு 181–164 மற்றும் 163 – 145 (சகோதரி & மனைவி இரண்டாம் கிளியோபாட்ரா) மகள் கிளியோபாட்ரா தியா (சிரியா ஆளுநரின் ராணி)
- எட்டாம் தாலமி - கிமு 170 – 163 மற்றும் 145 – 116)
- ஒன்பதாம் தாலமி - கிமு 116 –107 மற்றும் கிமு 88 – 81 (மூன்றாம் பெரெனிஸ் இணையாட்சியர்)
- பத்தாம் தாலமி - கிமு 107 – 88 (சகோதரி & மனைவி நான்காம் கிளியோபாட்ரா & மூன்றாம் பெரெனிஸ் இணையாட்சியர்)
- பதினொன்றாம் தாலமி - கிமு 80 (இணையாட்சியர் மூன்றாம் பெரெனிஸ்)
- பனிரெண்டாம் தாலமி - கிமு 80–58 மற்றும் கிமு 55–51 (சகோதரி மற்றும் மனைவி ஐந்தாம் கிளியோபாட்ரா)
- பதிமூன்றாம் தாலமி - கிமு 51 - 47 (சகோதரி மற்றும் மனைவி ஏழாம் கிளியோபாட்ரா)
- பதிநான்காம் தாலமி - கிமு 47 – 44 (சகோதரி மற்றும் மனைவி ஏழாம் கிளியோபாட்ரா)
- சிசேரியன் - கிமு 44 – 30 (ஏழாம் கிளியோபாட்ரா-ஜூலியஸ் சீசரின் மகன்)
தாலமி வம்ச இராணிகள்
- முதலாம் கிளியோபாட்ரா
- இரண்டாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 145 – 116
- மூன்றாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 81 – 80
- நான்காம் கிளியோபாட்ரா
- ஐந்தாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 58 – 57 மற்றும் 58 – 55
- ஆறாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 58
- நான்காம் அர்சினோ - காப்பாட்சியாளராக
- ஏழாம் கிளியோபாட்ரா - காப்பாட்சியாளராக கிமு 51 – 30
Remove ads
படக்காட்சிகள்
- தாலமி வம்சத்தை நிறுவிய தாலமி சோத்தர்
- இரண்டாம் கிளியோபாட்ரா (வலது புறம்)
- ஒன்பதாம் தாலமி
- பதிமூன்றாம் தாலமி & இசிஸ் எனும் பெண் கடவுள்
- சிசாரியன் எனும் பதினைந்தாம் தாலமி
- தாலமி இளவரசி
இதனையும் காண்க
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads