இசுக்காட்லாந்து இராச்சியம்

From Wikipedia, the free encyclopedia

இசுக்காட்லாந்து இராச்சியம்
Remove ads

இசுக்காட்லாந்து இராச்சியம் (Kingdom of Scotland) வட-மேற்கு ஐரோப்பாவில் 843இல் நிறுவப்பட்ட நாடு ஆகும்; 1707இல் இது இங்கிலாந்து இராச்சியத்துடன் இணைந்து ஒன்றிணைந்த பெரிய பிரித்தானிய இராச்சியம் உருவானது. இதன் ஆட்பகுதி விரிந்தும் சுருங்கியும் மாறியபோதும் பெரிய பிரித்தானியாவின் வடக்கில் தீவின் மூன்றில் ஒருபங்கு நிலத்தை கொண்டுள்ளது. தெற்கில் இங்கிலாந்து இராச்சியத்துடன் எல்லையைப் பகிர்ந்துள்ளது. ஆங்கிலேயர்கள் பலமுறை தாக்கியுள்ளனர்; இருப்பினும் முதலாம் இராபர்ட்டு தலைமையில் விடுதலைப் போரில் வெற்றிபெற்று பிந்தைய நடுக்காலங்களில் தனி நாடாக விளங்கியது. 1603இல் இசுக்காட்லாந்ந்தின் மன்னர் ஆறாம் ஜேம்சு இங்கிலாந்து அரசராகப் பொறுப்பேற்றார். அச்சமயத்தில் இசுக்காட்லாந்தும் இங்கிலாந்தும் விரும்பிய ஒன்றிணைப்புடன் ஒரே முடியாட்சியில் இருந்தன. 1707இல் இரண்டு இராச்சியங்களும் ஒன்றிணைப்புச் சட்டங்களின்படி ஒன்றிணைக்கப்பட்டு பெரிய பிரித்தானிய இராச்சியம் உருவானது.

விரைவான உண்மைகள் இசுக்காட்லாந்து இராச்சியம்Rìoghachd na h-Alba (கேலிக்கு )Kinrick o Scotland (சுகாத்து), தலைநகரம் ...

1482 முதல் இசுக்காட்லாந்தின் நிலப்பரப்பு தற்கால இசுக்காட்லாந்தின் நிலையை எட்டியது. கிழக்கில் வட கடலும் வடக்கிலும் மேற்கிலும் அத்திலாந்திக்குப் பெருங்கடலும் தென்மேற்கில் வடக்குக் கால்வாயும் ஐரியக் கடலும் இதன் எல்லைகளாக உள்ளன.

Remove ads

தொடர்புடைய பக்கங்கள்

இசுக்காட்லாந்து இராச்சியம்
c843-1707
தொடர்வுறு:
பெரிய பிரித்தானிய இராச்சியம்
1707-1801
தொடர்வுறு :
பெரிய பிரித்தானிய மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்
1801-1921
தொடர்வுறு :
ஐக்கிய இராச்சியம்
1921 முதல்
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads