பெரிய பிரித்தானிய இராச்சியம்

From Wikipedia, the free encyclopedia

பெரிய பிரித்தானிய இராச்சியம்
Remove ads

பெரிய பிரித்தானிய இராச்சியம் அல்லது பெரிய பிரித்தானிய ஐக்கிய இராச்சியம் (Kingdom of Great Britain) என்பது, 1707-1801 ஆண்டுக் காலப்பகுதியில் வடமேற்கு ஐரோப்பாவில் இருந்த இறைமையுள்ள ஒரு நாடாகும். இது, 1707 ஆம் ஆண்டின் ஒன்றியச் சட்டமூலத்தின் அடிப்படையில், இசுக்காட்லாந்து இராச்சியம், இங்கிலாந்து இராச்சியம் ஆகியவற்றை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டது. இந்த நடவடிக்கை பெரிய பிரித்தானியத் தீவு, மற்றும் அயர்லாந்து நீங்கலான பிற அருகிலிருந்த தீவுகள் ஆகியவற்றை உள்ளடக்கி ஒரே இராச்சியத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டது. அயர்லாந்து பிரித்தானிய ஆட்சியின் கீழ் தனியாகவே இருந்தது. புதிய இராச்சியத்தை வெசுட்மின்சிட்டர் அடிப்படையிலான நாடாளுமன்றமும், அரசும் கட்டுப்படுத்திவந்தன. இசுக்காட்லாந்து, இங்கிலாந்து ஆகிய இராச்சியங்கள், 1603 ஆம் ஆண்டில், அரசி முதலாம் எலிசபெத் இறந்தபின்னர், இசுக்காட்லாந்தின் அரசர் ஆறாம் சேம்சு இங்கிலாந்தின் அரசரானதிலிருந்து இரு இராச்சியங்களுக்கும் ஒரே அரசர்களே இருந்தனர்.

விரைவான உண்மைகள் பெரிய பிரித்தானிய இராச்சியம்1, நிலை ...

1798ன் ஐரியக் கிளர்ச்சி அடக்கப்பட்டபின் இயற்றப்பட்ட ஒன்றியச் சட்டமூலம் (1800) இன் அடிப்படையில் அயர்லாந்து இராச்சியம் மற்றும் பெரிய பிரித்தானிய இராச்சியம் இரண்டு இராச்சியங்களும் ஒன்றாக்கப்பட்டு பெரிய பிரித்தானிய இராச்சியம் என்னும் பெயருக்குப் பதிலாக பெரிய பிரித்தானிய மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் என்னும் புதிய பெயர் சூட்டப்பட்டது.

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads