இசுட்ரோன்சியம் அயோடைடு

From Wikipedia, the free encyclopedia

இசுட்ரோன்சியம் அயோடைடு
Remove ads

இசுட்ரோன்சியம் அயோடைடு (Strontium iodide) என்பது SrI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இதனுடைய நீரேற்று வடிவத்தின் மூலக்கூற்று வாய்ப்பாடு SrI2•6H2O ஆகும். இசுட்ரோன்சியம் மற்றும் அயோடின் சேர்ந்து உருவாகும் இவ்வயனச் சேர்மம் நீரில் கரையக்கூடியதாகவும் நீர்த்துப்போகக் கூடியதாகவும் இருக்கிறது. பொட்டாசியம் அயோடைடுக்கு மாற்று மருந்தாக இசுட்ரோன்சியம் அயோடைடு.[5] பயன்படுத்தப்படுகிறது. ஒளியியல் தெளிவு, உயர் அடர்த்தி, ஆற்றல் வாய்ந்த உயர் அணு எண், அடர்வு காணும் உயரொளி வெளியீடு முதலான காரணங்களால் ஐரோப்பியத்துடன் கலக்கப்பட்டு காமாக்கதிர் வீச்சின் அடர்வு காணியாகவும் இது பயன்படுத்தப்படுகிறது.

விரைவான உண்மைகள் பெயர்கள், இனங்காட்டிகள் ...
Remove ads

வினைகள்

இசுட்ரோன்சியம் கார்பனேட்டுடன் ஐதரயோடிக் அமிலம் சேர்க்கப்பட்டு வினைபுரிகையில் இசுட்ரோன்சியம் அயோடைடு உருவாகிறது.

SrCO3 + 2 HI → SrI2 + H2O + CO2

இசுட்ரோன்சியம் அயோடைடு காற்றில் பட்டால் மஞ்சள் நிறமாக மாறுகிறது. உயர் வெப்பநிலைகளில் காற்றின் முன்னிலையில் இது முழுவதுமாகச் சிதைவடைந்து இசுட்ரோன்சியம் ஆக்சைடு மற்றும் அயோடினாக மாறுகிறது[6].

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads