இசுட்ரோன்சியம் புரோமைடு
வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இசுட்ரோன்சியம் புரோமைடு (Strontium bromide) என்பது SrBr2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அறை வெப்பநிலையில் இசுட்ரோன்சியம் புரோமைடு வெள்ளை நிறத்துடன் மணமற்ற, படிக தூளாகக் காணப்படுகிறது. இசுட்ரோன்சியம் புரோமைடு சுடர் சோதனையில் பிரகாசமான சிவப்பு நிறத்தை அளிக்கிறது. இதனால் இசுட்ரோன்சியம் அயனிகளின் இருப்பு நிருபிக்கப்படுகிறது. இச்சேர்மம் எரிப்புப் பயன்பாடுகளையும் சில மருந்து பயன்பாடுகளையும் கொண்டுள்ளது.
Remove ads
தயாரிப்பு
இசுட்ரோன்சியம் ஐதராக்சைடுடன் ஐதரோபுரோமிக் அமிலத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் இசுட்ரோன்சியம் புரோமைடு உருவாகும்.
- Sr(OH)2 + 2 HBr → SrBr2 + 2 H2O
மாறாக இசுட்ரோன்சியம் கார்பனேட்டும் இசுட்ரோன்சியம் மூலமாகப் பயன்படுத்தப்படுவதுண்டு.
- SrCO3 + 2 HBr → SrBr2 + H2O + CO2(வாயு)
இந்த வினைகள் இசுட்ரோன்சியம் புரோமைடின் (SrBr2·6H2O) அறுநீரேற்றைக் கொடுக்கின்றன. இந்நீரேற்று 89 °செல்சியசு வெப்பநிலையில் சிதைவடைந்து இருநீரேற்றாக (SrBr2·2H2O) சிதைகிறது. 180 °செல்சியசு வெப்பநிலையில் நீரற்ற SrBr2 பெறப்படுகிறது.[1]
Remove ads
கட்டமைப்பு
அறை வெப்பநிலையில், இசுட்ரோன்சியம் புரோமைடு ஒரு நாற்கோணக அலகு செல் மற்றும் P4/n என்ற இடக்குழுவும் கொண்ட படிக அமைப்பை ஏற்றுக்கொள்கிறது. இந்த கட்டமைப்பு α-SrBr2 வடிவம் குறிப்பிடப்படுகிறது மற்றும் EuBr2, USe2 கட்டமைப்புகளுடன் ஒத்த கட்டமைப்பைக் கொண்டுள்ளது. ஆரம்பத்தில் இசுட்ரோன்சியம் புரோமைடின் கட்டமைப்பு PbCl2 வகையைச் சேர்ந்ததாக தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது.[2] ஆனால் இது பின்னர் சரி செய்யப்பட்டது.[3][4]
சுமார் 920 கெல்வின் (650 °செல்சியசு) வெப்பநிலையில் α-SrBr2 கனசதுர புளோரைட்டு கட்டமைப்பை ஏற்றுக்கொண்டு β-SrBr2 என்ற மிகக் குறைவான வரிசைப்படுத்தப்பட்ட கட்டத்திற்கு முதல்-வரிசை வினைக்கு உட்பட்டு திண்ம-திண்ம நிலை மாற்றத்திற்கு உட்படுகிறது. இசுட்ரோன்சியம் புரோமைடின் பீட்டா கட்டமானது, புரோமைடு துணை அணிக்கோவையில் உள்ள விரிவான கோளாறு காரணமாக அதிக அயனி கடத்துத் திறன் கொண்டுள்ளது.[4] 930 கெல்வின் (657 °செல்சியசு) வெப்பநிலையில் இசுட்ரோன்சியம் புரோமைடு உருகும்.
Remove ads
படக் காட்சியகம்
- α-வடிவ இசுட்ரோன்சியம் புரோமைடு சேர்மத்தில் இசுட்ரோன்சியம் மற்றும் புரோமின் அயனிகளின் பொதிவுகள் மாதிரி
- படிகவியல் சார்பற்ற இசுட்ரோன்சியம் அணு எண் 1 இன் சிதைந்த சதுர எதிர்ப்பட்டக ஒருங்கிணைப்பு வடிவியல்
- இசுட்ரோன்சியம் அணு எண் 2 இன் சதுர எதிர் பட்டக மூலக்கூற்று வடிவியல்
- புரோமின் அணு 1 இன் தட்டையான நான்முகி ஒருங்கிணைப்பு
- புரோமின் அணு 2 இன் உருக்குலைந்த நான்முகி வடிவம்
- புரோமின் அணு 3 இன் நாற்கோணக மூலக்கூற்று வடிவியல்
- புரோமின் அணு 4 இன் நாற்கோணக மூலக்கூற்று வடிவியல்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads