இசுபைடர்-மேன் (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இசுபைடர்-மேன் (Spider-Man) என்பது 2002 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இதே பெயரில் மார்வல் வரைகதையில் தோன்றும் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு கொலம்பியா பிக்சர்ஸ் மற்றும் மார்வெல் மகிழ்கலை ஆகியவை இணைந்து தயாரிக்க, சோனி பிக்சர்ஸ் இரிலீசிங் என்ற நிறுவனம் விநியோகம் செய்தது.
லாரா ஜிஸ்கின் மற்றும் இயன் பிரைஸ் ஆகியோர் தயாரிக்கும் இந்த படத்திற்கு டேவிட் கோயப் என்பவர் திரைக்கதை எழுத, சாம் ரைமி என்பவர் இயக்கத்தில் தோபி மக்குயர், வில்லெம் டபோ, கிர்ஸ்டன் டன்ஸ்ட், ஜேம்ஸ் பிரான்கோ, கிளிப் ராபர்ட்சன் மற்றும் ரோஸ்மேரி ஹாரிஸ் போன்ற பல நடித்துள்ளார்கள்.
ஸ்பைடர் மேன் என்ற படம் மே 3, 2002 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில் வெளியாகி ஒரே நாளில் 43.6 மில்லியன் டாலர்களை வசூலித்தது. இது உலகளவில் 825 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்து சாதனையைப் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு நாளிலேயே அதிக வசூல் சாதனையைப் பெற்ற திரைப்படமாக கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.[4][5][6] இந்த திரைப்படத்தை தொடர்ந்து இசுபைடர்-மேன் 2 (2004) மற்றும் இசுபைடர்-மேன் 3 (2007) ஆகிய படங்கள் வெளியானது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads