இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு

From Wikipedia, the free encyclopedia

இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு
Remove ads

இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசு (German Democratic Republic, செருமன் சனநாயகக் குடியரசு, German: Deutsche Demokratische Republik அல்லது Ostdeutschland; கிழக்கு செருமனி (East Germany) 1949 இலிருந்து 1990 வரையான காலப்பகுதியில் கம்யூனிச ஆட்சியில் இருந்த ஒரு நாடாகும். இது அக்காலகட்டத்தில் சோவியத் நட்பு நாடாக இருந்தது. மே 1949 இல் அமெரிக்க நட்பு நாடுகளின் பகுதியாக மேற்கு ஜெர்மனி என்ற நாடு உருவாக்கப்பட்டபின் அக்டோபர் 7, 1949 இல் சோவியத் ஆதரவு பெற்ற கிழக்கு ஜெர்மனி உருவாக்கப்பட்டது. கிழக்கு பெர்லின் இதன் தலைநகராக இருந்தது.

விரைவான உண்மைகள் இடாய்ச்சு மக்களாட்சிக் குடியரசுGerman Democratic RepublicDeutsche Demokratische Republik, தலைநகரம் ...

1955 சோவியத் ஒன்றியத்தினால் முழுமையான தனிநாடாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் சோவியத் படையினர் இங்கு நிலை கொண்டிருந்தனர். நேட்டோப் படையினர் மேற்கு ஜேர்மனியில் நிலை கொண்டிருந்தனர். இதனால் அங்கி பனிப்போர் எந்நேரமும் உச்சக்கட்டத்திலேயே இருந்து வந்தது. இரண்டு நாடுகளையும் தடுத்து வைத்திருந்த பேர்லின் சுவர் நவம்பர் 9, 1989 இல் உடைக்கப்பட்டுப் பின்னர் புதிய தேர்தல்கள் மார்ச் 18, 1990 இல் இடம்பெற்றன. ஆளும் கட்சி (SED) தேர்தலில் தோல்வியுற்றது. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 3, 1990இல் இரண்டு நாடுகளும் இணைந்தன.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads