இடி அமீன்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இடி அமீன் (Idi Amin Dada, 1924–ஆகஸ்ட் 16, 2003) உலகின் அதிபயங்கர கொடுங்கோலர்களில் ஒருவர். 1971 முதல் 1979 வரை உகாண்டாவை ஆட்சி செய்தார். இவர் பிறந்த ஆண்டு தொடர்பில் சரியான தகவல்கள் உறுதிப்படுத்தப்படவில்லை. 1924 அல்லது 1925 இல் பிறந்திருக்கலாம்; மே 18, 1928 இல் பிறந்திருக்கலாம் என்ற கருத்தும் உண்டு. இவரது ஆட்சி பற்றிய விபரங்கள் பல பயங்கரமானவை ஆகும். 1979 இல் உகண்டாவை விட்டுத் தப்பியோடி சவுதி அரேபியாவில் தஞ்சமடைந்தார். 2003 இல் அங்கேயே இறந்தார்.
உகாண்டா நாட்டில் 1971ம் ஆண்டில் ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை பிடித்தவர் இடி அமீன். சர்வாதிகார ஆட்சி நடத்தினார். உகாண்டா தான்சானியா போருக்கு பிறகு, 1979ம் ஆண்டு லிபியாவுக்கு தப்பி சென்றார். அங்கிருந்து 1981ம் ஆண்டு சவுதி அரேபியா சென்றார். 2003ம் ஆண்டு இறந்தார். சர்வாதிகாரி இடிஅமீன் நாட்டை விட்டு பாதுகாப்பாக வெளியேற அப்போது வசதி செய்து கொடுக்கப்பட்டது.[1]
Remove ads
உகாண்டா ஆசியர்களை வெளியேற்றல்
4 ஆகஸ்டு, 1972 அன்று உகாண்டாவின் இராணுவ சர்வாதிகார அதிபர் இடி அமீன், உகாண்டாவில் வாழும் ஆசிய நாட்டவர்களை 90 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற ஆணையிட்டார்.[2] வெளியேற்றத்தின் போது இருந்த 80,000 தெற்காசிய நாட்டவர்களில் பெரும்பான்மையினர் குசராத்தி வம்சாவளியினராக இருந்தனர்.[3][4] வெளியேற்றப்பட்டவர்களில் 27,000 ஆசியர்கள் ஐக்கிய இராச்சியத்திற்கும், 6,000 ஆசிய அகதிகள் கனடாவிற்கும், 4,500 அகதிகள் இந்தியாவிற்கும், 2,500 அகதிகள் அருகில் உள்ள கென்யாவிற்கும் புகலிடம் அடைந்தனர்.[5]
Remove ads
என்டபே நடவடிக்கை
இடி அமீன் ஆட்சியின் போது இசுரேலிய பாதுகாப்புப் படைகளின் அதிர்ச்சித் தாக்குதல் படையினரால் உகண்டாவின் என்டபே விமான நிலையத்தில் வைத்து 4 சூலை 1976 அன்று நடத்தப்பட்ட ஒரு பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை மூலம் பணயக் கைதிகளை மீட்டனர்.[6] ஒரு வாரத்துக்கு முன், 27 சூன் அன்று பிரான்சிய விமானசேவை நிறுவனத்தின் (Air France) வான் விமானம் 248 பயணிகளுடன் பலஸ்தீன விடுதலைக்கான மக்களாதரவு முன்னனி மற்றும் செருமனி விடுதலைக் குழுக்களினால் கடத்தப்பட்டு உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவிற்கு அருகிலுள்ள என்டபேக்கு கொண்டு செல்லப்பட்டது. கடத்தல்காரர்கள் இசுரேலியர்களையும் யூதர்களையும் பெரிய குழுவிலிருந்து வேறுபடுத்தி வேறு ஒரு அறையில் பலவந்தப்படுத்தி அடைத்தனர்.[7][8][9] அன்று பின்னேரம், 47 யூதரற்ற, இசுரேலியரற்றோர் விடுதலை செய்யப்பட்டனர்.[7][9][10] அடுத்த நாள், மேலும் 101 யூதரற்ற பணயக் கைதிகள் பிரான்சிய விமானசேவை நிறுவனத்தின் வான் விமானத்தினுள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். நூற்றுக்கு மேற்பட்ட யூத, இசுரேலிய பயணிகளுடன் யூதரல்லாத விமானியான மைக்கல் பாகோசும் பணயக் கைதியாக கொலை அச்சுறுத்தலுக்குள்ளாயினர்.[11][12]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads