இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955
இந்தியக் குடியுரிமையை நிர்வகிக்கும் சட்டங்கள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியாவின் குடிமகனாக இருக்க ஒரு நபரின் ஒப்புதல் அடிப்படையின்படி பிரிவு 5 முதல் 11 (பாகம் II) இந்திய அரசியலமைப்பின் கீழ் நிர்வகிக்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பான குடியுரிமைச் சட்டம் 1955ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டு, குடியுரிமை (திருத்தம்) சட்டம் 1986 திருத்தப்பட்டது, குடியுரிமை (திருத்தம்) சட்டம் 1992, குடியுரிமை (திருத்தம்) சட்டம் 2003, குடியுரிமை (திருத்தம்) சட்டம், 2005 மற்றும் குடியுரிமை (திருத்தம்) சட்டம், 2015. இந்திய அரசியலமைப்பின் கீழ் 9 வது பிரிவின்படி, எந்தவொரு நாட்டிலும் தானாகவே சொந்தமாக குடியுரிமை பெற்று வைத்திருக்கும் ஒரு நபர் இந்திய குடிமகன் அல்ல.
இந்தியக் குடியுரிமைச் சட்டம் தேசத்தில் உள்ள மக்களின் பிறப்புரிமை மூலம் குடியுரிமைக்குப் (ஜஸ் சொலி) பதிலியாக இரத்தத்தின் மூலம் குடியுரிமை (ஜஸ் சங்குனிஸ்) என்ற முறை பெரும்பாலும் பின்பற்றப்படுகிறது.[1]
Remove ads
வரலாறு
இந்திய அரசின் சட்டம் 1858 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசை நிறுவி பிரித்தானிய ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ் பெரும்பான்மை இந்தியர்களை கொண்டுவந்தது. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி இந்திய சுதந்திரம் அடைந்து, தேசிய சட்டம் நடைமுறைக்கு வரும் வரை, பிரித்தானிய அரசின் கீழ் இந்தியர்கள் பொதுவாக இரண்டு பிரிவுகளில் ஒன்றாக இருந்தார்கள்:
1. பிரித்தானிய இந்தியாவில் குடியேறிய இந்தியர்கள், பிரித்தானிய அரசிடம் ஒப்படைக்கப்பட்டனர் மற்றும் பிரித்தானிய தலைமையின் நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர்.(ஜனவரி 1, 1915) முதல், பிரித்தானிய அரசு மற்றும் ஏலியன்ஸ் சட்டம் 1914 ஆம் ஆண்டிலிருந்து பிரித்தானிய குடிமக்கள் பிரித்தானிய குடிமக்களாக பிரித்தானிய பேரரசின் ஆதிக்கங்களில் (பிரித்தானிய இந்தியா உட்பட) பிறந்தவர்களாக கருதப்பட்டது.[2]
2. பிரித்தானிய அரசாங்கத்தின் கீழ் அல்லது பிரித்தானிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாநிலத்தில் குடியிருக்கும் இந்தியர்களின் நிலைப்பாடு (இந்திய அரசு" அல்லது "தேசிய அரசு) என்றும் அழைக்கப்படுகிறது. பிரித்தானிய அரசின் பாதுகாக்கப்பின் கீழ் உள்ள நபர்கள் வெளிநாட்டவர்கள் என்று கருதப்பட்டனர் ஆனால் பிரித்தானிய-வழங்கப்பட்ட பாஸ்போர்ட்டில்(கடவுச்சீட்டு) பயணிக்க முடியும்.
Remove ads
குடியுரிமை பதிவுசெய்தல்
- இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் குடியுரிமை விண்ணப்பம் செய்வதற்கு முன் ஏழு ஆண்டுகளுக்கு இந்தியாவில் சாதாரணமாக வசித்து வரவேண்டும் (பிரிவு 5 (1) (அ)).
- இந்தியாவின் குடிமகனாகத் திருமணம் செய்து கொண்ட ஒரு நபர், பதிவு செய்ய விண்ணப்பிக்கும் முன் ஏழு ஆண்டுகளுக்கு இந்தியாவில் சாதாரணமாக வசிப்பவர்.
- இந்தியாவின் குடிமக்களாகப் பதிவுசெய்யப்பட்ட முழு வயது மற்றும் தகுதி கொண்ட ஒரு நபராகவும் மேலும் அவர் பெற்றோர்கள் இந்திய குடிமக்களாக பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
Remove ads
குடியுரிமை திருத்தம் மசோதா 2016
இந்திய குடியுரிமை திருத்தம் மசோதா 1955 ஆம் ஆண்டு ஜூலை 19 ஆம் தேதி மக்களவையில் முன்மொழிந்தது, 1955 ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டம் திருத்தப்பட்டது. இந்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானிலிருந்து வந்த இந்து, சீக்கியம், பௌத்தம், சமணம், பார்சி அல்லது கிறித்துவர் போன்ற சிறுபான்மை சமூகங்களிலிருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்கள் இந்திய குடியுரிமைக்கு தகுதியுடையவர்கள் ஆவார்.[3] ஆனால் முஸ்லீம் சமூகத்தை ஒதுக்கி வைத்திருந்தது.[4]
இரட்டை குடியுரிமை
- இந்தியாவில் பிறந்து வெளிநாட்டில் வசிக்கும் குழந்தைகள் இந்தியாவில் உள்ள தங்கள் பெற்றோரின் வயதான காலத்தில் சேவை செய்வதற்காக இரட்டை குடியுரிமை வழங்கப்படுகிறார்கள்.
- இந்தியாவில் பிறந்த (18 வயதிற்கு கீழ் உள்ள) குழந்தை இந்தியா மற்றும் மற்றொரு நாட்டுடன் சேர்த்து இரட்டை குடியுரிமை இருக்கலாம் மேலும் 18 வயதிற்கு மேல் உள்ள குழந்தைகள் இந்திய குடியுரிமையை பெற விரும்புகிறார்களா என்பதை அவர்களே தீர்மானிக்க முடியும்.
குஜராத்தின் தலைநகர் காந்திநகரில் நடப்பெற்ற விழாவில் கலந்துக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடியின் பிரவசி பாரதீய திவாஸ் (பி.பி.டி.டி) திறப்பு விழாவை முன்னிட்டு ஜனவரி 6, 2015[5] அன்று வெளிநாட்டு இந்தியர்களுக்கான இரட்டை குடியுரிமை பெறும் பொது நல வழக்கு (பிஐஎல்) உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.[6]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads