தேசியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம், 2003
இந்தியாவிற்கு புலம்பெயர்ந்தோருக்கான குடியுரிமை உரிமைகள் தொடர்பான சட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசியக் குடியுரிமை (திருத்தத்) சட்டம், 2003 (Citizenship (Amendment) Act, 2003) இந்திய நாடாளுமன்றத்தில் டிசம்பர் 2003-இல் 1955 இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் செய்யப்பட்ட சில திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டது.[1] இந்தியக் குடியரசுத் தலைவர் இச்சட்டடத் திருத்தததிற்கு சனவரி 2004-இல் அனுமதி வழகிங்னார்.[2]
இந்திய குடியுரிமைச் சட்டத்தில் கீழ்கண்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்படது. அவைகள்:
- சட்ட விரோதக் குடியேறிகள் என்பவர் யார் என்பதை விளக்குதல்.[3][4][5] சட்டவிரோதக் குடியேறிகளை சிறையில் அடைக்கப்படுவர் அல்லது நாடு கடத்தப்படுவர்[6]
- சட்டவிரோதமாக குடியேறியவர்களை பதிவு செய்வதன் மூலமோ அல்லது இயற்கையான முறையில் குடியுரிமை பெறத் தகுதி பெறச் செய்வது.[7][8][9][10]
- பெற்றோர் சட்டவிரோத குடியேறியவராக இருந்தால், அவர்களுக்கு இந்தியாவில் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்பால் குடியுரிமையை அனுமதிப்பது மறுப்பது[11][12][13]
- இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிற நாடுகளின் குடிமக்களுக்கு இந்தியாவின் வெளிநாட்டு குடிமகன் என்ற கருத்தை அறிமுகப்படுத்துதல்.[14][15]
இத்திருத்தத் சட்டம் 2003 இந்திய அரசுக்கு தேசியக் குடியுரிமைப் பதிவேட்டை பராமரிக்க அதிகாரம் வழங்கியுள்ளது. [16]
Remove ads
பின்னணி
இந்திய அரசியலமைப்புச் சட்டம் சமயப் பாகுபாடு இன்றி, இந்தியாவில் குடியேறிய அனைத்து நாட்டு அகதிகளுக்கும் குடியுரிமை வழங்கியுள்ளது. [17][18][19] இந்திய அரசு 1955-இல் இந்தியக் குடியுரிமை சட்டம் இயற்றியது. இச்சட்டத்தின்படி இந்தியாவில் குடியேறிய வெளிநாட்டவர்கள் இருவகைகளில் இந்தியக் குடியுரிமை பெறலாம். 1947-இல் இந்தியப் பிரிவினைக்கு முன்னர் இருந்த ஒன்றுப்பட்ட பிரித்தானிய இந்தியாவில் பிறந்தவர்கள் இந்தியாவில் 5 ஆண்டுகள் தொடர்ந்து குடியிருப்பின இயற்கையான குடியுரிமைப் பெறமுடியும்.[20] [21][22][a]
1971- ஆம் ஆண்டில் வங்காளதேச விடுதலைப் போரின் போதும், போருக்குப் பின்னரும் 2001-ஆண்டு முடிய இந்தியாவின் தில்லி, மேற்கு வங்காளம், அசாம், திரிபுரா போன்ற வடகிழக்கு மாநிலங்களில் 15 மில்லியன் வங்கதேசத்தவர் சட்டவிரோதமாகக் குடியேறினர்.[24]
சட்டவிரோத குடியேறிகளால் தங்கள் ந்லம் பாதிக்கப்படுவதாக அசாம் மக்கள் கருதியதின் விளைவாக, அனைத்து அசாம் மாணவர் அமைப்புகள் நடத்திய ஆறு ஆண்டு காலத் தொடர் போராட்டங்களுக்குப் பின்னர், அசாமில் சட்டவிரோத குடியேறிகளால் ஏற்படும் பிரச்சனை நீக்க, 15 ஆகஸ்டு 1985-இல் இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி முண்ணிலையில் அசாம் ஒப்பந்தம் ஏற்பட்டது.[25][26] மார்ச் 1971-க்கு முன்னர் அசாமில் சட்டவிரோதமாக குடியேறிவர்களை அசாமிலிருந்து வெளியேற்ற அசாம் ஒப்பந்தம் உறுதி செய்கிறது. [25][26]
இதன் விளைவாக 1955 இந்தியக் குடியுரிமை சட்டத்தில் 1986-இல் சட்ட திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.அ[27]இச்சட்டத்திருத்தத்தின் படி, 1987-க்கு முன்னர் இந்தியத் தாய் அல்லது தந்தைக்குப் பிறந்தவர்களுக்கு மட்டும் இந்தியக் குடியுரிமை வழங்கப்பட்டது. [27]மேலும் 1986-ஆம் ஆண்டின் குடியுரிமை சட்டத்திருத்தம் சட்ட விரோத குடியேறிகளின் குழந்தைகளுக்கும் இந்தியக் குடியுரிமை அனுமதி மறுக்கப்பட்டது.[27]
Remove ads
சட்டத் திருத்தங்கள்
இந்தியாவில் கள்ளக் குடியேறிகள்
சட்ட விரோதக் குடியேறிகள்:இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955-இல் இந்தியாவில் சட்ட விரோதக் குடியேறிகள் யார் என்பதை விளக்குகிறது.[3][4]
இச்சட்டத் திருத்தத்தின் சி பிரிவின் கூறியவாறு, இந்தியாவில் பிறந்த குழந்தையின் பெற்றோர் சட்டவிரோதமாக குடியேறியவராக இருந்தால், அவர்களுக்கு பிறந்த குழந்தைகளும் இந்தியக் குடிமகனாக இருக்க தகுதியற்றவர் ஆவார். 1987-2003-க்கு இடையில் பிறந்த குழந்தைகளுக்கு, ஒரு பெற்றோர் இந்திய குடிமகனாக இருந்தால் இந்தியக் குடியுரிமை பெறமுடியும். 1987-க்கு முன்னர் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை.</ref>[12]
தேசிய குடியுரிமைப் பதிவேடு
2003-ஆம் ஆண்டின் குடியுரிமைத் திருத்தத் சட்டம் இந்திய அரசு தேசியக் குடியுரிமைப் பதிவேட்டை கட்டாயமாகப் பராமரிக்க வேண்டும் என்றும், பதிவு பெற்ற இந்தியக் குடிமக்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும் வலியுறுத்துகிறது[28]
Remove ads
இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்s
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads