வங்காள நரி

From Wikipedia, the free encyclopedia

வங்காள நரி
Remove ads

வங்காள நரி (Bengal fox)(வல்பெசு பெங்காலென்சிசு) அல்லது இந்திய நரி என்பது ஒரு நரி சிற்றினம் ஆகும். இது இந்தியத் துணைக்கண்டத்தின் இமயமலை அடிவாரத்தில் நேபாளத்திலிருந்து தென் இந்தியா வரைக் காணப்படுகின்றது.[2] மேலும் தெற்கு மற்றும் கிழக்கு பாக்கித்தான், தென்கிழக்கு வங்கதேசம் போன்ற இடங்களில் காணப்படுகிறன்றது.[3][4][5] இவை பகலில் தூங்கிவிட்டு இரவில் தனித்தோ, கூடியோ வேட்டையாடக்கூடியன.

விரைவான உண்மைகள் வங்காள நரி, காப்பு நிலை ...
Remove ads

தோற்றம்

இவை சிறிய நரிகள், நீண்ட முக்கோண வடிவ காதுகளும், அடர்ந்த கருப்பு முனை கொண்ட வாலும், கொண்டவை. இவற்றின் வால் அதன் உடல் நீளத்தில் 50 முதல் 60% வரை இருக்கும். இவை சாம்பல் நிறத்தில் ஒல்லியான கால்களுடனும் இருக்கும். இவற்றின் தலை முதல் உடலின் நீளம் 18 அங்குலம் (46 செமீ), இதன் வால் 10 அங்குலம் (25 செமீ) நீளம் இருக்கும். எடை 5 இல் இருந்து 9 பவுண்ட் (2.3 இல் இருந்து 4.1 கிலோ).[3] இவை எலிகள், ஊர்வன, நண்டுகள், கரையான், பழங்கள் ஆகியவற்றை உண்டு வாழும்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads