தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், இந்தியா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், இந்தியா (Comptroller and Auditor General (CAG) of India) இந்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் அரசு நிதி உதவியைக் கணிசமான அளவில் பெறும் அமைப்புகளின் வரவு செலவுக் கணக்கைச் சரிபார்க்கும் அதிகாரத்துடன் இந்திய அரசியலமைப்பின் (Chapter V) கீழ் நிறுவப்பட்ட ஓர் அதிகார மையம் ஆகும். இதன் தலைவர் குடியரசு தலைவருக்கு நேரடியாகக் கட்டுப்பட்டவர். இவர் அரசுக்கு எந்தவிதத்திலும் கட்டுப்பட்டவர் கிடையாது.[3]

விரைவான உண்மைகள் இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், பரிந்துரையாளர் ...

அரசுடமையாக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் வெளித் தணிக்கையாளராகவும் இவர் செயல்படுகிறார். தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கைகள் நாடாளுமன்ற/மாநிலச் சட்டப்பேரவைகளின் சிறப்புக் குழுக்களான பொது கணக்குக் குழுக்களால் ஆய்வு செய்யப்படுகின்றன. நாடெங்கும் 58,000 ஊழியர்களைக் கொண்ட இந்திய தணிக்கை மற்றும் கணக்குத் துறையின் தலைவராகவும் செயல்படுகிறார்.

இந்திய அதிகார முன்னுரிமைப் பட்டியலில் ஒன்பதாவதாக உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு இணையாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளார். தற்போது G.C.முர்மு பதவியில் உள்ளார். இந்தியாவின் 13வது தலைமைக் கணக்குத் தணிக்கையாளரான ராஜீவ் மகரிஷி செப்டம்பர், 2017ல் பதவியேற்றார். வினோத் ராய் தலைமையின் கீழ் இயங்கிய பொழுது இந்த அமைப்பு அரசின் முறைகேடுகளை வெளிப்படுத்தியமையால் குறிப்பாக இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு,பொதுநலவாய விளையாட்டுகள் நடத்துதலில் ஊழல் மற்றும் இந்திய நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு முறைகேடு பரவலாக ஊடகங்களில் அறியப்படுகிறது.[4][5]

அரசுடன் வருமானத்தைப் பகிர்ந்து கொள்ளும் திட்டங்களில் தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார்-பொது பங்களிப்புத் திட்டத்தை (PPP) ஆய்வு செய்யும் அதிகாரம் தலைமைக் கணக்குத் தணிக்கையாளருக்கு உண்டு.[6]

Remove ads

இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர்களின் பட்டியல்

மேலதிகத் தகவல்கள் எண்., இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் ...

ஆதாரம்:[7]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads