கிரீஷ் சந்திர முர்மு

இந்திய அரசு அதிகாரி From Wikipedia, the free encyclopedia

கிரீஷ் சந்திர முர்மு
Remove ads

கிரீஷ் சந்திர முர்மு (Girish Chandra Murmu; சந்தாளி மொழி:ᱜᱤ᱾ ᱪᱚ᱾ ᱢᱩᱨᱢᱩ; பிறப்பு: 21 நவம்பர் 1959), ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் முதல் துணைநிலை ஆளுநராக நியமிக்கபட்ட இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாவார்.[2] ஒடிசா மாநிலத்தின் மயூர்பஞ்சில் பிறந்த இவர் முண்டா மொழி பேசும் சந்தாலி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்.

விரைவான உண்மைகள் கிரீஷ் சந்திர முர்முஐஏஎஸ், இந்தியாவின் 14-ஆவது தலைமை கணக்குத் தணிக்கையாளர் (சிஏஜி) ...

1985-இல் குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடியின் முதன்மைச் செயலாராக பணிபுரிந்தவர்.[3]

Remove ads

கல்வி

கிரிஷ் சந்திர முர்மு ஒடிசாவின் உத்கல் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். பின்னர் ஐக்கிய இராச்சியத்தின் பிர்மிங்காம் பல்கலைக் கழகத்தில் முதுநிலை வணிக மேலாண்மை பட்டம் பெற்றவர்.

ஜம்மு காஷ்மீர் ஒன்றிய துணைநிலை ஆளுநராக

Thumb
நவம்பர் 07, 2019 அன்று புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை முர்மு சந்திக்கும் காட்சி

2019 ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் புதிதாக நிறுவப்பட்ட ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி 31 அக்டோபர் 2019 அன்று முதல் ஒன்றியப் பகுதியானது.[4] ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதியின் முதல் துணைநிலை ஆளுநராக 31 அக்டோபர் 2019 நள்ளிரவு அன்று கிரீஷ் சந்திர முர்மு பதவியேற்றார்.[5] [6][7][8] [9]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads