இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியத் துடுப்பாட்டக் கட்டுபாடு வாரியம் (Board of Control for Cricket in India) அல்லது பிசிசிஐ (BCCI) ,தேர்வுத் துடுப்பாட்டம் உட்பட இந்தியாவில் நடைபெறும் அனைத்து முக்கிய துடுப்பாட்ட போட்டிகளுக்கும் பொறுப்பான வாரியமாகும். இந்திய துடுப்பாட்ட அணி மேற்கொள்ளும் அனைத்து சுற்றுப்பயணங்களையும் போட்டிகளையும் அனைத்தையும் ஒழுங்குபடுத்துவதற்கும் அவற்றைக் கட்டுப்படுத்தவும் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் 1928ஆம் ஆண்டு திசம்பரில் நிறுவப்பட்டது.இதன் தலைமையகம் மும்பையில் உள்ளது. இது கொல்கத்தா துடுப்பாட்ட மன்றத்திற்கு மாற்றாக நிறுவப்பட்டது. தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்தின்படி ஓர் சங்கமாக பதிவு செய்யப்பட்டது.நாட்டின் பல்வேறு அரசு விளையாட்டு மைதானங்களைப் பயன்படுத்தினாலும் இது ஓர் தனியார் விளையாட்டுக் கழகமாகும். பொதுவாக மாநில துடுப்பாட்டச் சங்கத்தில் உறுப்பினராக, சங்க உறுப்பினர் ஒருவரின் பரிந்துரையுடன் நுழைவுக் கட்டணமும் செலுத்த வேண்டும். மாநில சங்கங்கள் அவர்களது செயலாளர்களை தேர்வு செய்கின்றனர். மாநில செயலாளர்கள் பிசிசிஐ அலுவலர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். தனியார் சங்கங்களாகையால் அவர்களது வரவுசெலவு கணக்குகள் பொதுவில் வைக்கப்படுவதில்லை.
பன்னாட்டுத் துடுப்பாட்ட மன்றத்தில் உறுப்பினராக உள்ள பிசிசிஐ ஒப்புமை இன்றி எந்த துடுப்பாட்டப் போட்டியும் அங்கீகரிக்கப் படுவதில்லை.
Remove ads
விருதுகள்
- தீலிப் சார்தெசாய் விருது
- பாலி உம்ரிக்கர் விருது
- லாலா அமர்நாத் விருது
துடுப்பாட்டப் வளர்ச்சி மற்றும் போட்டிகள்
இந்தியாவில் துடுப்பாட்டம் அனைத்து நிலைகளிலும் விளையாடப்படுகிறது. பிசிசிஐ கீழ் வரும் உள்நாட்டு துடுப்பாட்ட போட்டிகளை நடத்தி வருகிறது.
- கூச் பெகார் கோப்பை
- இராணி கோப்பை
- தியோதர் கோப்பை
- துலீப் கோப்பை
- இந்தியன் பிரீமியர் லீக் (IPL)
- ரஞ்சிக் கோப்பை
- சையத் முச்த்தாக் அலி
- விஜய் அசாரே கோப்பை
- வினோ மன்கட் கோப்பை
ஒப்பந்தம்
இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம், வீரர்களுடன் மூன்று வகையான ஒப்பந்தங்களை கொன்டுள்ளது. இது எ - ஒப்பந்தம், பி-ஒப்பந்தம், சி-ஒப்பந்தம் எனப்படும். எ - ஒப்பந்தம் கீழ் வரும் வீரர்கள் பருவத்திற்கு ரூபாய் 1 கோடியும் [$186,000], பி- ஒப்பந்தம் கீழ் வரும் வீரர்கள் பருவத்திற்கு ரூபாய் 50 லட்சம், சி-ஒப்பந்தம் கீழ் வரும் வீரர்கள் பருவத்திற்கு ரூபாய் 25 லட்சம் பெறுகின்றனர்.
2013 நவம்பர் மாதத்தின்படி, எ - ஒப்பந்தம் கீழ் வரும் வீரர்கள்[10]
2013 நவம்பர் மாதத்தின்படி, பி - ஒப்பந்தம் கீழ் வரும் வீரர்கள்.
2013 நவம்பர் மாதத்தின்படி, சி - ஒப்பந்தம் கீழ் வரும் வீரர்கள்.
- தினேஷ் கார்த்திக்
- வினய் குமார்
- மொகமத் ஷாமி
சம்பளம்
வீரர்களுக்கு கூடுதல் சம்பளமாக 5 நாள் போட்டிக்கு 7 லட்சம், 1 நாள் 4 லட்சம், டி20 போட்டிக்கு 2 லட்சம் வழங்கபடுகிறது.
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads