இராகுல் திராவிட்
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராகுல் சரத் திராவிட் (Rahul Sharad Dravid); பிறப்பு: 11 சனவரி, 1973) ஓர் இந்தியத் துடுப்பாட்டப் பயிற்சியாளர் மற்றும் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் தலைவர் ஆவார். இவர் தற்போது இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகப் பணியாற்றுகிறார். ஆண்கள் தேசிய அணிக்கு நியமிக்கப்படுவதற்கு முன்பு, இந்திய 19 வயதிற்குட்பட்டோர் துடுப்பாட்ட அணி மற்றும் இந்தியா அ அணிகளின் தலைமைப் பயிற்சியாளராகவும் இருந்தார். இவரது பயிற்சியின் கீழ், 19 வயதுக்குட்பட்ட அணி 2016 துடுப்பாட்ட உலகக் கிண்ணத் தொடரில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது மற்றும் 2018-இல் வெற்றி பெற்றது. மட்டையாட்ட பாணிக்காகப் பரவலாக அறியப்படும் இவர்[1] பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் 24,177 ஓட்டங்கள் எடுத்தார். துடுப்பாட்ட வரலாற்றில் சிறந்த துடுப்பாட்டக்காரர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.[2] ம்ர் டிஃபன்டபிள் மற்றும் தி வால் என்றும் அறியப்படுகிறார்.[3]
Remove ads
ஆரம்பகால வாழ்க்கை
திராவிட் மத்தியப் பிரதேசத்தின் இந்தோரில், மராத்திய பிராமண குடும்பத்தில் பிறந்தார்.[4][4] இவரது குடும்பம் பின்னர் கர்நாடகாவின் பெங்களூருக்குக் குடிபெயர்ந்தது. இங்கு வளர்ந்தார்.[5] இவரது தாய் மொழி மராத்தியாகும்.[6] திராவிட்டின் தந்தை, சரத் திராவிட், பழக்கூழ் மற்றும் பதனப்படுத்தி தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரிந்தார். இதனால் இவருக்கு ஜாம்மி என்ற புனைப்பெயரை உருவாகியது. இவரது தாயார் புட்பா, பெங்களூரில் உள்ள பல்கலைக்கழக விஸ்வேசுவரய்யா பொறியியல் கல்லூரியில் கட்டிடக்கலைப் பேராசிரியராக இருந்தார்.[7] திராவிட்டிற்கு விஜய் என்ற ஒரு தம்பி உள்ளார்.[8]
Remove ads
உள்ளூர்ப் போட்டிகள்
திராவிட் 12 வயது முதல் துடுப்பாட்டம் விளையாடத் தொடங்கினார். மேலும் 15 வயதுக்குட்பட்டோர், 17 வயதுக்குட்பட்டோர் மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் அணிகளில் கர்நாடகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[9] முன்னாள் துடுப்பாட்ட வீரர் கேகி தாராபூர், சின்னசாமி அரங்கதில் நடைபெற்ற கோடைக்கால முகாமில் பயிற்சியாளராக இருந்தபோது டிராவிட்டின் திறமையை முதலில் கவனித்தார்.[10] திராவிட் தனது பள்ளி அணிக்காக நூறு ஓட்டங்கள் அடித்தார்.இவர் இலக்குக் கவனிப்பாளராகவும் விளையாடினார்.[8]
Remove ads
பன்னாட்டு போட்டிகள்
உள்ளூர்ப் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதன் மூலம் தேசிய அணிக்காக 1994 வில்சு துடுப்பாட்டத் தொடருக்காக் அணியில் இடம்பெற்றார். ஆனால் விளையாடும் அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. 1996ஆம் ஆண்டு திராவிட் இல்லாத 1996 உலகக் கிண்ணத்திற்கான இந்திய அணியை தேர்வாளர்கள் அறிவித்தபோது, ஓர் இந்திய நாளிதழ் இது நியாயமற்ற செயல் என கூறியது.[11]
ஒருநாள் போட்டிகள்
1996 உலகக் கிண்ணத்திற்குப் பிறகு சிங்கப்பூரில் நடைபெற்ற சிங்கர் கிண்ணத் தொடரில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் ஏப்ரல் 3, 1996இல் வினோத் காம்ப்ளிக்குப் பதிலாக இவர் தனது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானார்.[12][13] மூன்று ஓட்டங்கள் மட்டுமே எடுத்து முத்தையா முரளிதரன் பந்துவீச்சீல் ஆட்டமிழந்தார். ஆனால் போட்டியில் இரண்டு கேட்சுகளைப் பிடித்தார்.[14] அதைத் தொடர்ந்து அடுத்த ஆட்டத்தில் பாக்கித்தானுக்கு எதிராக 4 ஓட்டங்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.[14]
தேர்வுத் துடுப்பாட்டம்
ஒருநாள் அறிமுகத்திற்கு மாறாக, இவரது தேர்வுத் துடுப்பாட்ட அறிமுகமானது மிகவும் வெற்றிகரமாக இருந்தது. ஐந்து ஆண்டுகளாக உள்நாட்டுத் தொடர்களில் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் விளைவாக திராவிட் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணிக்குத் தேர்வு செய்யப்பட்டார்.[15][16] சூன் 20, 1996 அன்று இங்கிலாந்துக்கு எதிராக இலார்ட்சில் நடைபெற்ற போட்டியில் சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் காயம் காரணமாக அவருக்குப் பதிலாக தேர்வ்த் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுகமானார்.[12][17] கணுக்காலில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வந்த மஞ்ச்ரேக்கருக்கு, இரண்டாவது தேர்வுப் போட்டியின் காலையில் உடற்தகுதி சோதனை நடத்தப்பட இருந்தது. மஞ்ச்ரேக்கர் இந்த சோதனையில் தோல்வியடைந்தால் அவருக்குப் பதிலாக திராவிட் விளையாடுவார் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது. மஞ்ச்ரேக்கர் உடற்தகுதித் தேர்வில் தோல்வியடைந்ததால், நாணய சுழற்சிக்குப் பத்து நிமிடங்களுக்கு முன்பு, அப்போதைய இந்திய பயிற்சியாளராக இருந்த சந்தீப் பாட்டில், டிராவிட்டிடம் அவர் அறிமுகம் ஆவதைத் தெரிவித்தார்.[17]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads