1957 இந்தியப் பொதுத் தேர்தல்

இந்தியாவில் பொதுத் தேர்தல் From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்தியக் குடியரசின் இரண்டாம் நாடாளுமன்றத் தேர்தல் 1957 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு இரண்டாவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. ஆட்சியில்ர்ருந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சி 371 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியமைத்தது. ஜவகர்லால் நேரு மூன்றாம் முறையாக பிரதமரானார்.

விரைவான உண்மைகள் மக்களவைக்கான 494 இடங்கள், பதிவு செய்த வாக்காளர்கள் ...
Remove ads

பின்புலம்

இத்தேர்தலில் 403 தொகுதிகளில் இருந்து 494 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவற்றுள் 312 ஒற்றை உறுப்பினர் தொகுதிகள். 91 தொகுதிகளிலிருந்து தலா இரண்டு உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் தவிர 2 ஆங்கிலோ இந்தியர்களும் மக்களவைக்கு நேரடியாக நியமனம் செய்யபட்டனர். காங்கிரசுக்கு முக்கிய எதிர்கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) இருந்தது. வேறு சில கட்சிகளும் காங்கிரசை எதிர்த்தன. ஆனால் பதினோறு ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்த காங்கிரசும் நேருவும் செல்வாக்கின் உச்சியில் இருந்தனர். எளிதாக சென்ற தேர்தலில் வென்றதை விட கூடுதல் வாக்குகளையும் இடங்களையும் வென்றனர்.

Remove ads

முடிவுகள்

மொத்தம் 45.44 % வாக்குகள் பதிவாகின

கட்சி % இடங்கள்
காங்கிரசு47.78371
சுயேட்சைகள்19.3242
இந்திய பொதுவுடமைக் கட்சி8.9227
பிரஜா சோசலிசக் கட்சி10.4119
கணதந்திர பரஷத்1.077
ஜார்கண்ட் கட்சி0.626
பட்டியல் ஜாதிகள் ஜூட்டமைப்பு1.696
பாரதிய ஜனசங்கம்5.974
இந்திய குடியானவர்கள் மற்றும் தொழிலாளர்கள் கட்சி0.774
சோட்டா நாக்பூர் சாந்தல் பர்கனாஸ் ஜனதா கட்சி0.423
பார்வார்டு ப்ளாக் (மார்க்சியம்)0.552
மக்கள் ஜனநாயக முன்னணி0.872
இந்து மகாசபை0.861
மொத்தம்100494
Remove ads

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads