1967 இந்தியப் பொதுத் தேர்தல்

இந்தியாவில் பொதுத் தேர்தல் From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்தியக் குடியரசின் நான்காம் நாடாளுமன்றத் தேர்தல் 1967 ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களைக் கொண்டு நான்காவது மக்களவை கட்டமைக்கப்பட்டது. ஆட்சியிலிருந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சி 283 தொகுதிகளில் வென்று மீண்டும் ஆட்சியமைத்தது. இந்திரா காந்தி இரண்டாம் முறையாக பிரதமரானார்.

விரைவான உண்மைகள் மக்களவைக்கான 518 இடங்கள், பதிவு செய்த வாக்காளர்கள் ...
Remove ads

பின்புலம்

இத்தேர்தலில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை 520ஆக உயர்த்தப்பட்டிருந்தது. இதில் இரண்டு உறுப்பினர்கள் நேரடியாக நியமிக்கப்பட்ட ஆங்கிலோ-இந்தியர்கள். இந்திய விடுதலைக்குப் பிறகு தொடர்ந்து இந்தியப் பிரதமராகப் பதவி வகித்த ஜவகர்லால் நேரு 1964ம் ஆண்டு மரணடமடைந்தார். அவருக்குப்பின் யார் பிரதமர் ஆவது என்று காங்கிரசுக்குள் எழுந்த கோஷ்டிப் பூசலில் காமராஜர், நிஜலிங்கப்பா தலைமையிலான “சிண்டிகேட்” குழு, மொரார்ஜி தேசாயினைத் தோற்கடித்து லால் பகதூர் சாஸ்திரியைப் பிரதமராக்கியது. ஆனால் பதவியேற்ற இரு ஆண்டுகளுள் சாஸ்திரியும் இறந்து போகவே மீண்டும் தலைவர் தேர்தலில் மோதல் ஏற்பட்டது. தேசாய்க்கு எதிராக இம்முறை சாஸ்திரி அமைச்சரவையில் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த நேருவின் மகள் இந்திரா காந்தியை பிரதமர் வேட்பாளராக நிறுத்தியது சிண்டிக்கேட். இந்திரா தேசாயை எளிதில் வென்று 1966ல் பிரதமரானார். 1960களில் இந்திய மக்களிடையே காங்கிரசின் செல்வாக்கு பெருமளவு சரிந்திருந்தது. 1962 இந்திய-சீனப் போர், 60களின் மத்தியில் நிலவிய கடும் உணவுப் பற்றாக்குறை, விலைவாசி உயர்வு, இந்திராவுக்குத் தன் தந்தையைப் போல் தனிப்பட்ட செல்வாக்கு இல்லாமை போன்ற காரணங்களாலும், தமிழ்நாடு, பஞ்சாப், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் காங்கிரசுக்கு வலுவான எதிர்க்கட்சிகள் உருவாகியிருந்ததாலும் காங்கிரசு பலவீனமான நிலையில் இத்தேர்தலை சந்தித்தது. முந்தைய தேர்தல்களைவிட மிகக் குறைவான அளவு வாக்குகளையும் இடங்களையும் வென்று ஆட்சியமைத்தது.

Remove ads

முடிவுகள்

மொத்தம் 61.04 % வாக்குகள் பதிவாகின

கட்சி % இடங்கள்
காங்கிரசு40.78283
சுதந்திராக் கட்சி8.6744
பாரதிய ஜனசங்கம்9.3135
சுயேட்சைகள்13.7835
திமுக3.7925
இந்திய பொதுவுடமைக் கட்சி5.1123
சம்யுக்தா சோசலிசக் கட்சி4.9223
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்4.2819
பிரஜா சோசலிசக் கட்சி3.0613
வங்காள காங்கிரசு0.835
அகாலி தளம் (சந்த் ஃபடேஃக் சிங்)0.663
பார்வார்டு ப்ளாக்0.432
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக்0.282
இந்தியக் குடியானவர் மற்றும் தொழிலாளர் கட்சி0.712
இந்தியக் குடியரசுக் கட்சி2.471
ஒருங்கிணைந்த கோவர்கள் (சேக்வேரா குழு)0.071
ஜன கிராந்தி தளம்0.131
ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி0.141
மொத்தம்100518
Remove ads

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads