இந்திய ரூபாய்க் குறியீடு

இந்திய ரூபாய்க் குறியீடு From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்திய ரூபாய்க் குறியீடு () என்பது இந்தியாவின் அதிகாரப்பூர்வ நாணயமான இந்திய ரூபாயின் பணக் குறியீடு ஆகும். இந்தக் குறியீடு இந்திய மக்களிடையே நடத்தப்பட்ட ஒரு திறந்த போட்டியின் மூலம் தேர்வு செய்யப்பட்டது. இந்த வடிவமைப்பு இந்திய அரசுக்கு 15 சூலை, 2010 அன்று அளிக்கப்பட்டது.[1] இந்திய ரூபாய்க் குறியீடு தேவநாகரி எழுத்தான "र" (ர) என்பதையும் இலத்தீன் எழுத்தான "R" என்பதையும் இணைத்து உருவாக்கப்பட்டதாகும். ஒருங்குறி எழுத்துருத் தொகுதியில் U+20B9 என்ற இடத்தில் இக்குறியீடு வைக்கப்பட்டுள்ளது.

விரைவான உண்மைகள் ₹, இந்திய ரூபாய்க் குறியீடு ...
Thumb
இந்திய ரூபாய்க் குறியீடு
Remove ads

தோற்றம்

மார்ச்சு 5, 2009 அன்று இந்திய அரசு இந்திய ரூபாய்க்கு ஒரு குறியீடு உருவாக்கும் போட்டியை அறிவித்தது.[2][3] 2010ஆம் ஆண்டு இந்திய வரவுசெலவுத் திட்டக் கணக்கின்போது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இந்திய ரூபாய்க்குக் குறியீடு என்பதை முன்மொழிந்தார். அக்குறியீடு இந்தியாவின் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் பறைசாற்றுவதாகவும் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.[4] நந்திதா கொர்ரீய-மெக்ரோத்ரா, இத்தேஷ் பத்மசாலி, சிபின் கேகே, சாருக் ஜே இரானி, த. உதயகுமார் ஆகிய ஐந்து பேரது குறியீடுகள் அமைச்சரவைப் பரிந்துரைக்கு அனுப்பட்டன.[5][6][6] இந்தப் போட்டியில் மொத்தம் 3331 குறியீடுகள் பெறப்பட்டன. இதிலிருந்து இவர்கள் ஐந்து பேரது குறியீடுகள் மட்டும் இறுதிச் சுற்றுக்கு சூன் 24, 2010 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டன.[7] இறுதியாக சூலை 15, 2010 அன்று அமைச்சரவைக் கூட்டத்தில்[1] த. உதயகுமார் உருவாக்கிய குறியீடு இறுதிப்படுத்தப்பட்டது.[1][8] த. உதயகுமார் திமுக தலைவர் ஒருவரது மகனாவார்.[9] இவர் குவகாத்தியிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் துணைப்பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

Remove ads

மேலும் பார்க்க

Thumb
புதிய இந்திய ரூபாய்க் குறியீட்டுடன் இரண்டு ரூபாய் நாணயம்

தங்கள் நாட்டுப் பணத்திற்கு பன்னாட்டுக் குறியீடுகளைக் கொண்டுள்ள சில நாடுகள்;

  1. அமெரிக்கா -டாலர் ($)
  2. ஐரோப்பா -யூரோ (€)
  3. ஜப்பான் -யென் (¥)
  4. கியூபா -பெசோஸ்
  5. கொரியா -வான்
  6. லாவோஸ் -கிப்ஸ்
  7. கோஸ்டாரிக்கா -கொலோன்
  8. சுவிட்சர்லாந்து -பிராங்க்
  9. நைஜீரியா -நைராஸ்
  10. மங்கோலியா -டக்ரிஸ்
  11. உக்ரைன் -இர்வினா
  12. தாய்லாந்து -பாக்ட்
  13. துருக்கி -லிராஸ்
  14. தென்னாப்பிரிக்கா -ரான்ட்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads