இந்திய வாக்காளர் குழு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தியாவின் வாக்காளர் குழு (Indian electoral college) என்பது இந்தியாவின் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்க மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 55(2) பிரிவு வழங்கியுள்ள உரிமைகளில் ஒன்றாகும்.
பதிவு:
வாக்காளர் குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள்:
- மக்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் (இந்திய நாடாளுமன்றத்தின் கீழவை);
- மாநிலங்களவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் (இந்திய நாடாளுமன்றத்தின் மேலவை);
- அனைத்து மாநிலங்களின் சட்டப் பேரவையின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்; மற்றும்
- சட்டப்பேரவை கொண்டுள்ள ஒவ்வொரு ஒன்றிய ஆட்சிப்பகுதியின் (காட்டாக, தில்லி, புதுச்சேரி )தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
குறிப்பு: நியமிக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு வாக்குரிமை இல்லை.
- இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தல் மாநிலங்களைப் பொறுத்தவரை ஓர் சார்பாற்றம் வீதத் தெரிவாண்மை ஆகும்.
ஒரு குறிப்பிட்ட மாநில சட்டமன்ற உறுப்பினரின் வாக்குக்கு வாக்காளர் குழுவில் அதிக்கப்படும் மதிப்பு = மாநிலத்தின் மக்கள்தொகை / (தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை X 1000)
அதாவது ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினருக்கும் உள்ள வாக்கு மதிப்பு அவர் எத்தனை ஆயிரம் வாக்காளர்களின் சார்பாக உள்ளார் என்பதாகும். இவ்வகையாக அனைத்து மக்களும் மறைமுகமாக குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
குடியரசுத்தலைவரை தேர்ந்தெடுக்க கீழ்கண்டவாறு ஒவ்வொரு மாநிலங்களுக்கு வாக்குகளும் வாக்காளர்களும் பிரிக்கப்பட்டுள்ளது.[1]
இந்த பக்கம் பகுதி (மாநில உறுப்பினரின் வாக்குகளின் மதிப்பு 2011 அடிப்படையில் கணக்கிடப்படல்வேண்டும் தொடர்புடையவை) காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையைப் புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |
(*) அரசியலமைப்பு (சம்மு & காசுமீரில் பயன்பாடு ) ஆணை
- மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள்- மக்களவை (543) + மாநிலங்களவை (233) = 776
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் வாக்கின் மதிப்பு = சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளின் மொத்த மதிப்பு / நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை.
- ஒவ்வொரு வாக்கின் மதிப்பு = 549474/776 = 708
- நாடாளுமன்றத்திற்கான மொத்த வாக்குகளின் மதிப்பு = 549408
- மொத்த வாக்காளர்கள் = சட்டமன்ற + நாடாளுமன்ற உறுப்பினர்கள் = 4896
- மொத்த வாக்குகளின் எண்ணிக்கை =1098882
Remove ads
மூலம்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads