மாதலி

From Wikipedia, the free encyclopedia

மாதலி
Remove ads

மாதலி, இந்து தொன்மவியலில் தேவர்களின் தலைவன் இந்திரனின் தேரோட்டியும்,.[1] தூதுவரும் ஆவார். காளிதாசன் இயற்றிய அபிஞான சாகுந்தலம் நாடக இலக்கியத்தில், அசுரர்களுக்கு எதிரான போரில், இந்திரனுக்கு ஆதரவாக துஷ்யந்தனை மாதலி அழைத்தார்.[2]பத்ம புராணத்தில், ஆன்மாவின் தன்மை, முதுமை மற்றும் பிற கருத்துக்கள் குறித்து மாதலி மன்னர் யயாதியுடன் உரையாடுகிறார்.[3]

விரைவான உண்மைகள் மாதலி, இடம் ...
Thumb
இந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க, மாதலி தேரோட்ட அருச்சுனன் நிவாதகவசர்ளளுடன் போரிடும் காட்சி
Remove ads

பிறப்பு

வாமன புராணத்தில் மாதலியின் பிறப்பு பற்றிய கதை உள்ளது. முனிவர் ஷமீகருக்கும்-தபஸ்வினிக்கும் பிறந்த குழந்தையே மாதலி ஆவார். இந்திரன் மாதலியை தனது தேரோட்டியாக ஏற்றுக்கொண்டான்.[4]

மகாபலிச் சக்கரவர்த்தியுடனான போரில்

பாகவத புராணத்தில் இந்திரன் தலைமையிலான தேவர்கள், மகாபலி சக்கரவர்த்திக்கு எதிரான போரில், ஜம்பா எனும் அசுரன் இந்திரனின் தேரோட்டி மாதலியை தனது எரி ஈட்டியால் தாக்கினான். இதனால் மாதலி வலியால் துடித்தார்.அதைக் கண்டு கோபமடைந்த இந்திரன் அசுரனுக்கு எதிராக தனது வஜ்ராயுதத்தால் தாக்கி ஜம்பாவின் தலையை துண்டித்தான்.[5]

Thumb
இராவணனுக்கு எதிரான போரில் இராமருக்கு ஆலோசனை கூறும் மாதலி

இராமாயணம்

இராமாயணத்தின், யுத்த காண்டத்தில், இராவணன் தன் தேரில் ஏறி, தரையில் நின்றிருந்த இராமருடன் போரிட்டுக் கொண்டிருந்தான். இதனைக் கண்ட இந்திரன் இராமருக்கு உதவி செய்ய தனது தேரோட்டி மாதலி மூலம் தனது தேரை இராமருக்கு அனுப்பி வைத்தான்.[6]

மகாபாரதம்

மகாபாரதத்தில் சிவபெருமானிடமிருந்து தவம் செய்து பாசுபத அஸ்திரத்தை பெற்ற அருச்சுனனை, இந்திரனின் ஆணைப்படி, மாதலி அருச்சுனனை தேரில் அமர்த்தி, இந்திரனின் வசிப்பிடமான அமராவதிக்கு அழைத்துச் சென்றான்[7]இந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க, மாதலி தேரோட்ட அருச்சுனன் நிவாதகவசர்ளை போரில் வென்றான்.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads