இந்திரா நகர் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்திரா நகர் தொடருந்து நிலையம் (Indira Nagar railway station) என்பது சென்னை பறக்கும் தொடருந்து திட்ட வழித்தடத்தில் உள்ளது. இரசாயன தொழில்நுட்பக் கழகத்திற்கு எதிரே ராஜீவ் காந்தி சாலையில் அமைந்துள்ள இந்த நிலையம் சென்னை பறக்கும் தொடருந்து திட்டத்தில் பிரத்தியேகமாக சேவை செய்கிறது. இந்திரா நகரில் உள்ள கால்வாய் கரை சாலை வழியாகவும் இந்த நிலையத்தை அணுகலாம்.
Remove ads
வரலாறு
சென்னை பறக்கும் தொடருந்து திட்ட வழித்தட வலையமைப்பில் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக இந்திரா நகர் நிலையம் 26 சனவரி 2004 அன்று திறக்கப்பட்டது.
அமைப்பு
இந்த உயர்த்தப்பட்ட நிலையம் பக்கிங்காம் கால்வாயின் மேற்குக் கரையில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலைய மேடையின் நீளம் 280 மீ ஆகும்.[1] நிலைய கட்டடம் அதன் அடித்தளத்தில் 1,350 சதுர மீட்டர் வாகன நிறுத்துமிடத்துடன் கூடியது.[2]
நிலைய அமைப்பு
| தத | சாலை நிலை | வெளியேறு/நுழைவு |
| நிலை1 | இடைமாடி | கட்டணக் கட்டுப்பாடு, நிலைய பயணச்சீட்டு நிலையங்கள், தானியங்கி பயணச்சீட்டு விற்பனை இயந்திரங்கள் |
| நிலை 2 | பக்க நடைமேடை | இடதுபுறத்தில் கதவுகள் திறக்கும் | |
| நடைமேடை 2 வடக்குநோக்கி |
→ சென்னைக் கடற்கரை நோக்கி அடுத்த நிலையம் கசுதூரிபாய் நகர் | |
| நடைமேடை 1 தெற்கு நோக்கி |
← வேளச்சேரி நோக்கி அடுத்த நிலையம் திருவான்மியூர் (பரங்கிமலை எதிர்கால விரிவாக்கம்) | |
| பக்க நடைமேடை | இடதுபுறத்தில் கதவுகள் திறக்கும் | ||
| நிலை 2 | ||
Remove ads
சேவை
இந்திரா நகர் தொடருந்து நிலையம் உயர்த்தப்பட்ட நிலையம் ஆகும். இது பக்கிங்காம் கால்வாயின் மேற்குக் கரையில் கட்டப்பட்டுள்ளது. நடை மேடையின் நீளம் 280 மீ ஆகும்.[3] நிலைய கட்டிடம் அதன் அடித்தளத்தில் 1,350 சதுர மீட்டர் வாகன நிறுத்துமிடம் உள்ளது.[4]
மேலும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
