இந்து குஃசு
ஆக்கானித்தான் பாக்கித்தான் எல்லையிலுள்ள மலைப்பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்து குஃசு (Hindu Kush) என்பது வடமேற்கு பாகித்தானுக்கும் கிழக்கு மற்றும் நடு ஆப்கானித்தானுக்கும் இடையில் பரந்திருக்கும் மலைத் தொடராகும். இத்தொடரின் அதிஉயர் புள்ளி பாகித்தானில் உள்ள திரிச் மிர் (7,708 மீ அல்லது 25,289 அடி).
இந்து குஃசு மலைத்தொடர் பாமிர், காரகோரம் ஆகிய மலைத்தொடர்களின் மேற்குத் தொடர்ச்சியாகும். அத்துடன் இது இமயமலையின் ஒரு உப மலைத்தொடருமாகும்[1].
Remove ads
மலைகள்
இந்து குஃசு மலைத்தொடரின் மலைகளின் உயரம் மேற்குத் திசை வழியே குறைந்து கொண்டு செல்லுகின்றது. காபூலுக்குக் கிட்டவாக நடுப்பகுதியில் இவற்றின் உயரம் 4,500 முதல் 6,000 மீட்டர் வரை உள்ளது; மேற்கில், இவற்றின் உயரம் 3,500 முதல் 4,000 மீட்டர்கள் (11,500 அடி முதல் 13,000 அடி) வரை உள்ளது. இந்து குஃசு மலைத்தொடரின் சராசரி உயரம் 4,500 மீட்டர்கள் (14,700 அடி). இவற்றின் நீளம் கிட்டத்தட்ட 966 கிலோமீட்டர்கள் (600 மைல்கள்). இவற்றில் 600 கிலோமீட்டர்கள் (370 மைல்கள்) தூர மலைகள் மட்டுமே இந்து குஃசு மலைகள் என அழைக்கப்படுகின்றன. இத்தொடரின் ஏனைய பகுதிகள் பல சிறிய மலைத்தொடர்களைக் கொண்டுள்ளன. இவை கோகி பாபா, சலாங்க், கோகி பாக்மன், சுபின் கார், சுலைமான் மலைத்தொடர், சியா கோகு போன்றவையாகும்.
இந்து குஃசு மலைத்தொடரில் இருந்து பாயும் ஆறுகளில், எல்மண்ட் ஆறு, அரி ஆறு, காபூல் ஆறு, மற்றும் சிசுடன் ஆற்றுப்படுகை போன்றனை முக்கியமானவை.
Remove ads
இவற்றையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads