இந்து கோஸ்வாமி

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்து பால கோஸ்வாமி (Indu Bala Goswami) ஒரு இந்திய அரசியல்வாதியும் இமாச்சலப் பிரதேசத்தின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவரும் ஆவார். இவர் இந்தியப் பாராளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவைககு இமாசலப் பிரதேச பாரதிய ஜனதா கட்சிக் குழுவின் உறுப்பினராக இருந்தார். அவர் இமாச்சலப் பிரதேசத்தின் மாநில சமூக நல வாரியம் இமாச்சலப் பிரதேசத்தின் மாநில மகளிர் ஆணையம் ஆகியவற்றின் தலைவராக இருந்தார். [2] [3] [4] [5]

விரைவான உண்மைகள் இந்து கோஸ்வாமி, நாடாளுமன்ற உறுப்பினர், மாநிலங்களவை ...
Remove ads

அரசியல் வாழ்க்கை

இந்து கோஸ்வாமி 1988 ஆம் ஆண்டில் பாஜகவில் சேர்ந்தார், அவர் நீண்ட காலமாக கட்சிப் பணியாளராக பணியாற்றி வந்தார். 80 களின் பிற்பகுதியில் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் துணைத் தலைவராக பிரதமர் நரேந்திர மோடியுடன் பணியாற்றினார்.

2017 ஆம் ஆண்டு இமாசலப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலில் பாலம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஆஷிஷ் பூடைலை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியுற்றார். இமாச்சல பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண் வேட்பாளர் இவரேயாவார். [6]

2020 ஆம் ஆண்டில் அவர் பாரதிய ஜனதா கட்சியளித்த வாய்ப்பில் இமாச்சலப் பிரதேசத்தின் சார்பில் மாநிலங்களவைக்கு போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads