இந்து சமயத்தில் பெண்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்து சமயத்தில் பெண்கள் சமநிலையிலிருந்து மிகவும் ஒடுக்கப்பட்ட நிலை வரை பல்வேறுத் தளங்களில் இருந்துள்ளனர். இந்து சமயத்தில் பெண்களின் நிலையும் பங்கும் புனித உரைகள், வரலாற்றுக் காலம், அமைவிடம், குடும்பப் பாரம்பரியம் போன்றவற்றால் பலவாறாக உள்ளது. சிலர் இந்து சமயம் பெண்களை மிகவும் ஒடுக்குவதாக கருதுகின்றனர். வேறு சிலர் இந்துப் பெண்களின் தாழ்ந்தநிலைக்கு சமயம் காரணமல்ல என்றும் பண்பாடும் வழக்கங்களுமே காரணம் என்றும் கருதுகின்றனர். இதற்காக, வேதங்களில் பெண்கள் கடவுளராக சித்திரிக்கப்படுவதை மேற்கோளிடுகின்றனர். புராணக் கதையொன்றின்படி சீதை இல்லாதிருந்த காலத்தில் இராமன் சீதா போன்ற மரப்பொம்மை ஒன்றை செய்து உடன்வைத்துக் கொண்டு யாகம் செய்ததாகக் கூறப்பட்டுள்ளது ஆணின் செயல் பெண்ணின் துணையின்றி முடியாதிருப்பதைச் சுட்டுவதாக இவர்கள் கூறுகின்றனர்.[1]
Remove ads
பண்டைய இலக்கியம்
இந்து சமயம் பல்லாயிரக்கணக்கான பண்டைய உரைகளை அடிப்படையாகக் கொண்டது; இவை செல்வாக்கு, நம்பகத்தன்மை, உள்ளடக்கம் மற்றும் பொருள் ஆகியவற்றில் பலத்த வேறுபாடுகளைக் கொண்டவை. இவற்றில் மிகவும் செல்வாக்குடைய தொன்மையான புனிதநூல் வேதம் ஆகும். இந்து சமயத்தில் பெண்களின் பங்கு குறிப்பிடப்படும் வேத உரையையும் எடுத்துக்கொள்ளப்படும் நிலையையும் பொறுத்தது. எடுத்துக்காட்டாக, இந்து சமய இதிகாசங்களான இராமாயணத்திலும் மகாபாரதத்திலும் பெண்களின் பங்கு உயர்வாக இருந்துள்ளது; ஆனால் சமயப் பணிகளையும் சமூகப்பணிகளையும் வரையறுக்கும் மனுதரும சாத்திரம் பெண்களின் உரிமைகளை கட்டுப்படுத்துகின்றது. இராமாயணத்தில் கணவர்களுடன் பற்றுடன் இருந்தபோதும் மனைவிகளுக்கு வழமையாக கருதப்பட்ட செயற்பாடுகளுக்கு எதிராக இருந்தனர்.[2] ஆனால் இந்த கருத்தாக்கங்களுக்கு எதிராக பல ஆணாதிக்க உரைகள் இருந்தமையால் இந்த இராமாயண கால சமனிலை தற்போதுதான் மிக மெதுவாக மீள்வாசிக்கப்படுகின்றது.
பண்டைய புனித உரைகளின் அடிப்படையில் இந்து சமயம் கட்டமைக்கப்பட்டிருப்பினும் அவற்றையே முழுமையானவையாக கொண்டிருக்கவில்லை. இந்த சமயம் "ஒருசில நம்பிக்கைகள் அல்லது கருதுகோள்கள் அல்லது செய்முறைகளால்" வரையறுக்கப்படவில்லை.[2]
Remove ads
வரலாற்று சூழமைவு
தற்காலத்தில் இந்து மனைவி எவ்விதச் சூழலிலும் கற்புடன் இருக்குமாறு எதிர்பார்க்கப்படுகின்றது.[3] இது பண்டைய மரபுகளிலிருந்து மாறுபட்டு உள்ளது. காட்டாக, இந்து இராச்சியங்களில் மதிப்புமிகுந்த பல தொழில்முறை பெண்கள் அரசவையில் இடம் பெற்றிருந்தனர்; வைசாலி இராச்சியத்தில் அம்பாபாலி போன்ற நடனமங்கைகள், கடவுள் வழிபாட்டையே முதன்மையாக கொண்ட தேவதாசிகள், பெண் கணிதவியலாளர்கள், பசவிக்கள் எனப்படும் பெண் மந்திரவாதிகள், குளிகைகள் எனப்பட்ட பெண் சடங்கு நடத்துபவர்களைக் எடுத்துக்காட்டாகக் கூறலாம்).
1800களில், ஐரோப்பிய அறிஞர்கள் மற்ற பெண்களை விட இந்து சமயப் பெண்டிரை "இயற்கையிலேயே கற்புடன்" "மிக நேர்மையானவர்களாக" விவரிக்கின்றனர். இருப்பினும், வெளிநாட்டவராகவும் ஆண்களாகவும் இருந்ததால் மிகவும் கட்டுப்பாட்டுடைய இந்துப் பெண்களுடனான அணுக்கம் மட்டுப்படுத்தப்பட்ட நிலை இருந்திருக்கலாம்.[4] மகாபாரதமும் மனு சாத்திரமும் பெண்கள் கௌரவிக்கப்படும்போது கடவுளர் மகிழ்ச்சி கொள்வதாகவும் இல்லையெனில் செய்யும் பூசைகள் பலனின்றி போகும் என்றும் வலியுறுத்துகின்றன.[5]
Remove ads
இந்துக் கடவுளின் பாலினம்
பல்வேறு இந்து உட்குழுக்களும் மடங்களும் எல்லாம் வல்லவனின் தன்மையையும் பாலினத்தையும் குறித்து பல்வாறாக கருதுகின்றன. எடுத்துக்காட்டாக சாக்தர்கள் தேவியை பெண்மை ஆற்றலாக வழிபடுகின்றனர். வைணவர்கள் திருமகளை திருமாலுக்கு இணையாகவும் சைவர்கள் பார்வதியை சிவனுக்கு இணையாகவும் கருதுகின்றனர்; கடவுளின் ஆண்,பெண் கூறுகளாகக் கருதுகின்றனர். கௌடிய வைணவர்கள் கிருட்டிணனை விட பெண் கூறும் காதலியுமான ராதாவை மிகவும் வழிபடுகின்றனர். இந்து நம்பிக்கையாளர்கள் கடவுளுக்கு ஆண்,பெண் கூறுகளைக் கொண்டவர்களாக கருதுகின்றனர். சில பிரிவுகளில் ஆண் கடவுளரான சிவன், இந்திரன் போன்றோர் துர்க்கையை வழிபடுவதாக நம்புகின்றனர்.[6]
பூலான் தேவி போன்ற பெண்ணியலாளர்கள் துர்க்கையை தங்கள் சின்னமாக கொண்டிருந்தனர். இருப்பினும், அத்வைதக் கருதுகோளின்படி, எல்லாம் வல்ல இறைவன், எவ்வித வடிவமோ, பாலினமோ இல்லாது அத்தகைய கருத்துகளுக்கு அப்பாற்பட்டதாக உள்ளது.
மேற்சான்றுகள்
நூற் பரிந்துரைப்பு
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads