இந்தோனேசிய ஐக்கிய மாநிலங்கள்
1949–1950-ஆம் ஆண்டுகளில், இந்தோனேசியாவில் இருந்த ஒரு குறுகிய கால கூட்டமைப்பு From Wikipedia, the free encyclopedia
Remove ads
இந்தோனேசிய ஐக்கிய மாநிலங்கள் (ஆங்கிலம்: United States of Indonesia அல்லது Federal Republic of Indonesia (RUSI); இந்தோனேசியம்: Republik Indonesia Serikat (RIS); இடச்சு: Verenigde Staten van Indonesië) என்பது 1949–1950-ஆம் ஆண்டுகளில், இந்தோனேசியாவில் இருந்த ஒரு குறுகிய கால கூட்டமைப்பு ஆகும்.
டச்சு-இந்தோனேசிய வட்ட மேசை மாநாட்டைத் (Dutch–Indonesian Round Table Conference) தொடர்ந்து, 27 டிசம்பர் 1949 அன்று, நெதர்லாந்து டச்சு கிழக்கு இந்தியத் தீவுகளின் (Dutch East Indies) இறையாண்மையை, இந்தோனேசிய ஐக்கிய மாநிலங்கள் கூட்டமைப்பிடம் முறையாக மாற்றிக் கொடுக்கப்பட்டது.
இந்தோனேசியாவைத் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக இந்தோனேசிய தேசியவாதிகள்; நெதர்லாந்துடன் இந்தோனேசிய தேசிய புரட்சி எனும் வடிவத்தில் நான்கு ஆண்டுகாலம் போராட்டம் செய்தனர். அந்தப் போராட்டம் மேற்காணும் இறையாண்மை மாற்றத்துடன் ஒரு முடிவுக்கு வந்தது.
Remove ads
பின்னணி
சனவரி 1942-இல், ஜப்பானியர்கள் டச்சு கிழக்கிந்தியத் தீவுகளை ஆக்கிரமித்து, டச்சு குடிமைவாத அரசாங்கத்தை இடமாற்றம் செய்தனர்.[1] 17 ஆகத்து 1945 அன்று, ஜப்பானியர்கள் சரணடைந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு, இந்தோனேசிய தேசியவாதத் தலைவர் சுகார்னோ இந்தோனேசிய சுதந்திரத்தை அறிவித்தார்[2]
சுகார்னோவிற்கும்; மற்றும் இந்தோனேசியத் தலைமைத்துவத்திற்கும்; ஜப்பானியர்கள் ஒத்துழைப்பு தருவததாகக் கருதிய இடச்சுக்காரர்கள், தங்கள் அதிகாரத்தை மீட்டெடுக்க முடிவு செய்தனர்.[3]
மவுண்ட்பேட்டன் பிரபு
பிரித்தானிய தென்கிழக்கு ஆசியக் கட்டளையின் (British South East Asia Command) கீழ் இருந்த டச்சு கிழக்கிந்தியத் தீவுகளுக்குப் பொறுப்பான மவுண்ட்பேட்டன் பிரபு, இடச்சுப் படைகள் ஜாவா மற்றும் சுமாத்திராவில் தரையிறங்க அனுமதி மறுத்தார். அங்கு அப்போது நடைமுறையில் இருந்த இந்தோனேசியக் குடியரசுக் கட்சியின் அதிகாரத்தை (De Facto Republican Authority) அங்கீகரித்தார்.
இடச்சு கிழக்கிந்தியத் தீவுகள்
ஜப்பானிய கடற்படையால் முன்னர் ஆக்கிரமிக்கப்பட்ட பெரும்பாலான இடச்சு கிழக்கிந்தியத் தீவுப் பகுதிகளின் மீது; டச்சுக்காரர்கள் மீண்டும் தங்களின் கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தனர். சூலை 1946-இல், இடச்சுக்காரர்கள் சுலாவெசியில் மலினோ மாநாடு (Malino Conference) எனும் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர்.[4][5]
இதில் போர்னியோ மற்றும் கிழக்கு இந்தோனேசியாவின் பிரதிநிதிகள்; நெதர்லாந்து முன்மொழிந்த இந்தோனேசிய ஐக்கிய மாநிலங்கள் எனும் முன்மொழிவிற்கு ஆதரித்தனர்.[6][7]
லிங்கட்ஜத்தி உடன்படிக்கை
இதைத் தொடர்ந்து 1946 நவம்பர் 15 அன்று, லிங்கட்ஜத்தி உடன்படிக்கை (Linggadjati Agreement) மூலமாக சுமாத்திரா, ஜாவா மற்றும் மதுரா மீதான இந்தோனேசிய குடியரசின் நடைமுறைக் கட்டுப்பாட்டை இடச்சுக்காரர்கள் அங்கீகரித்தனர்.[8][9]
இந்தோனேசிய ஐக்கிய மாநிலங்கள்

டென்பசார் மாநாடு
இடச்சுக்காரர்கள், திசம்பர் 1946-இல், டென்பசார் மாநாட்டிற்கு (Denpasar Conference) ஏற்பாடு செய்தனர். இதுவே கிழக்கு இந்தோனேசியா மாநிலத்தை (State of East Indonesia) நிறுவுவதற்கு வழிவகுத்தது. பின்னர், 1947-இல் மேற்கு போர்னியோவில் ஒரு மாநிலம் உருவாவதற்கும் வழிவகுத்தது.[10] அதன் பின்னர், இரு தரப்பினருக்கும் இடையே பல சமரச மாநாடுகள் நடைபெற்றன. இறுதியாக, 27 டிசம்பர் 1949-இல், இந்தோனேசியாவின் இறையாண்மை, இந்தோனேசிய ஐக்கிய மாநிலங்கள் கூட்டமைப்பிடம் வழங்கப்பட்டது.[11][12]
இடச்சுக்கார்ரகளிடம் இருந்து இறையாண்மையைப் பெறுவதற்கு இந்தோனேசிய ஐக்கிய மாநிலங்கள் எனும் கூட்டமைப்பு பெரும் பங்காற்றி உள்ளது.[13]
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
சான்றுகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads