இப்ராகிம் ரையீசி

ஈரான் இஸ்லாமியக் குடியரசின் எட்டாவது ஜனாதிபதி From Wikipedia, the free encyclopedia

இப்ராகிம் ரையீசி
Remove ads

இப்ராகிம் ரையீசி (Ebrahim Raisi) எனப் பொதுவாக அழைக்கப்படும் இப்ராகிம் இரைசல்சதாத்தி (Ebrahim Raisolsadati; 14 திசம்பர் 1960 – 19 மே 2024[7]), ஈரானிய அரசியல்வாதி ஆவார். இவர் ஈரானின் 8-ஆவது அரசுத்தலைவராக 2021 முதல் 2024 இல் இறக்கும்வரை பதவியில் இருந்தார். ஒரு கொள்கையாளராகவும், ஒரு முஸ்லிம் சட்ட அறிஞராகவும் விளங்கிய இவர் 2021 தேர்தலுக்குப் பிறகு அரசுத்தலைவரானார்.

விரைவான உண்மைகள் அயத்துல்லா சையத்இப்ராகீம் இரையீசிEbrahim Raisi, ஈரானின் 8-ஆவது அரசுத்தலைவர் ...

ஈரானின் நீதித்துறை அமைப்பில் பல பதவிகளில் இரைசி பணியாற்றினார். 1980-1990களில் தெகுரானின் துணை அரசு வழக்கறிஞராகவும் அரசு வழக்கறிஞராகவும் இருந்தார். பெரும்பாலும் "தெகுரானின் கசாப்புக் கடை" என்று அழைக்கப்படும் இவர், 1988-இல் ஈரானில் ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளின் மரணதண்டனைக்கு காரணமான வழக்கு விசாரணைக் குழுவில் இருந்த நான்கு பேரில் ஒருவராக இருந்தார், எனவே "மரணக் குழு" என்று முத்திரை குத்தப்பட்டார். பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள், ஐக்கிய நாடுகளின் சிறப்பு அறிக்கையாளர்களால் மானுடத்திற்கு எதிரான குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டார்.

இரைசி பின்னர் துணைத் தலைமை நீதிபதி (2004-2014), தலைமைச் சட்ட அதிகாரி (2014-2016), தலைமை நீதியரசர் (2019-2021) ஆகிய பதவிகளில் பணியாற்றினார். 2006 தேர்தலில் முதல் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தென் கொராசன் மாகாணத்தைச் சேர்ந்த நிபுணர்களின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவர் மசாத் வெள்ளிக்கிழமைத் தொழுகைத் தலைவரும் இமாம் ரெசா ஆலயத்தின் பெரும் இமாமுமான அகமது அலமோழோடாவின் மருமகன் ஆவார்.

2017 இல் இரைசி பழமைவாத இசுலாமியப் புரட்சிப் படைகளின் செல்வாக்கு அணியின் வேட்பாளராக அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டார், மிதவாதியான அன்றைய அரசுத்தலைவர் அசன் ரூகானியிடம் 57% இற்கு 38.3% வாக்குகளால் தோல்வியடைந்தார். இரைசி 2021 இல் 62.9% வாக்குகளைப் பெற்று அசன் ரூகானியை வென்று அரசுத்தலைவரானார். பல பார்வையாளர்களின் கூற்றுப்படி, 2021 ஈரானிய ஜனாதிபதித் தேர்தல் அலி காமெனியின் ஆதரவாளராகக் கருதப்பட்ட இரைசிக்கு ஆதரவாக தேர்த மோசடி இடம்பெற்றதாக பார்வையாளர்கள் குழு தெரிவித்தது. இரைசி பெரும்பாலும் அலி காமெனிக்கு அடுத்ததாக அதியுயர் தலைவராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், 2024 வர்சகான் உலங்குவானூர்தி விபத்தில் இறந்ததன் விளைவாக, இது ஒருபோதும் கைகூடவில்லை. ஈரானிய அரசியலில் கடும்போக்காளராகக் கருதப்பட்ட இரைசியின் அரசுத்தலைவர் பதவி, கூட்டு விரிவான செயல்திட்டம் (JCPOA) தொடர்பாக அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளில் முட்டுக்கட்டையை சந்தித்தது, 2022 செப்டம்பர் 16 அன்று மகசா அமினியின் இறப்பினால் 2022 இன் பிற்பகுதியில் நாடு முழுவதும் பெரிய அளவிலான போராட்டங்கள் இடம்பெற்றன. இரைசியின் காலத்தில், ஈரான் யுரேனியம் செறிவூட்டலை தீவிரப்படுத்தியது, பன்னாட்டு ஆய்வுகளுக்கு இடையூறாக இருந்தது, உக்ரைன் மீதான உருசியாவின் படையெடுப்பில் உருசியாவை ஆதரித்தமை போன்றவை நாட்டில் எதிர்ப்பை சந்தித்தார். கூடுதலாக, காசா மோதலின் போது ஈரான் இசுரேல் மீது ஏவுகணை, ஆளில்லா வானூர்தித் தாக்குதலை நடத்தியது, இசுபுல்லா, ஹூத்தி இயக்கம் போன்ற குழுக்களுக்கு ஆயுதம் கொடுத்தது.

2024 மே 19 அன்று, இரைசி, வெளியுறவு அமைச்சர் உசைன் அமீர்-அப்துல்லாகியன், பிற அதிகாரிகள் உள்ளிட்ட 9 பேர் வர்சகான் அருகே உலங்கவானூர்தி விபத்தில் சிக்கினர். அரசு ஊடகங்கள் இவர்களின் இறப்பை உறுதிப்படுத்தின.[8][9]

Remove ads

தேர்தல் வரலாறு

2021 ஈரான் அதிபர் தேர்தலில்[10] இப்ராகிம் ரையீசி 61.95% வாக்குகளைப் பெற்று ஈரான் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். இரானில் சுமார் 5.9 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 2.8 கோடி பேர் வாக்களித்தனர். இதில் இப்ராகிம் ரையீசி சுமார் 1.8 (61.95%) கோடி வாக்குகள் பெற்றுள்ளார்.[11] மிகப் பழமையான பார்வைகளை உடைய இவர், அரசியல் கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதில் தொடர்புடையவர். அமெரிக்க அரசு தடை விதித்தவர்களில் ஒருவர். இரானில் அதி உயர் தலைவருக்கு அடுத்தபடியாக இராண்டாவது பெரிய அதிகாரம் மிக்க பதவி அதிபர் பதவி ஆகும்.[12]

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, தேர்தல் ...
Remove ads

இப்ராகிம் ரையீசி மீதான உலக நாடுகளின தலைவர்கள் கருத்துகள்

  • இரானில் இப்ராஹீம் ரையீசி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து சர்வதேச நாடுகள் அதீத கவலை கொள்ள வேண்டும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் லியோர் ஹையட், 1988-ஆம் ஆண்டில் அரசியல் கைதிகளை கூண்டோடு மரண தண்டனை விதிக்கப்பட்ட சம்பவத்தை சுட்டிக் காட்டி, டெஹ்ரானின் கசாப்புக்காரர் இப்ராகிம் ரையீசி என தெரிவித்துள்ளார். இப்ராகிம் ரையீசியால் சுமார் 30 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக ஹையட் தெரிவித்துள்ளார் இதே எண்ணிக்கையைதான் இரானின் மனித உரிமைகள் அமைப்பு தெரிவிக்கிறது. இப்ராகிம் ரையீசி த்லைமையிலான நான்கு நீதிபதி கொண்ட மரணக் குழு 5 ஆயிரம் பெண்கள் மற்றும் ஆண்களுக்கு மரண தண்டனை விதித்ததாக பன்னாட்டு மன்னிப்பு அவை தெரிவிக்கிறது.
  • இரான் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே உள்ள "பாரம்பரியமான நட்பு மற்றும் நல் உறவை" சுட்டிக்காட்டி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இப்ராஹிம் ரையீசிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சிரியா, இராக், துருக்கி மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாட்டின் தலைவர்களும் இதே போன்றதொரு வாழ்த்து செய்தியையும் தங்களின் ஆதரவையும் தெரிவித்துள்ளனர். காசாவை நிர்வகிக்கும் ஹமாஸ் ஆயுதக்குழுவின் செய்திதொடர்பாளர், இரான் வளமும் வளர்ச்சியும் பெற வேண்டும் என்று வாழ்த்தியுள்ளார்.[15]
Remove ads

ஈரானின் குடியரசுத் தலைவர்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads