இமாம் சதுக்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இமாம் சதுக்கம் (Imam Square) அல்லது நகசு சகான் சதுக்கம் (Naqsh-e Jahan Square; Persian: میدان نقش جهان; மைதானே நகசு சகான்; பொருள்: "உலக சதுக்கத்தின் உருவம்"; முன்னைய பெயர் சா சதுக்கம் [Shah Square]), என்பது ஈரானின் இசபகான் நகரத்தின் மத்தியில் அமைந்துள்ள சதுக்கம் ஆகும். 1598 இற்கும் 1629 இற்கும் இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட இது முக்கியமானதொரு வரலாற்றுப் பகுதியும், ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் உலகப் பாரம்பரியக் களமும் ஆகும். இது 160 மீட்டர்கள் (520 அடி) அகலமும் 560 மீட்டர்கள் (1,840 அடி) நீளமும் உடையது (89,600 சதுர மீட்டர்கள் (964,000 sq ft) பரப்பு).[1]
சா பள்ளிவாசல் சதுக்கத்தின் தென் பகுதியில் அமைந்துள்ளது. அதன் மேற்குப் பகுதியில் அலி கபு அரண்மனை உள்ளது. சதுக்கத்தின் கிழக்குப் பக்கத்தில் செய்க் லொட்ப் அல்லா பள்ளிவாசலும், வடக்குப் பக்கத்தில் பெரிய அங்காடிக்கான கெய்சாரியா வாயிலும் உள்ளது. தற்போது சா பள்ளிவாசலில் வெள்ளிக்கிழமைத் தொழுகை இடம்பெறுகிறது.
இச்சதுக்கம் ஈரானிய 20,000 றியால் நாணயத்தின் பின் பக்கத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது.[2]
Remove ads
வரலாறு
1598 இல், சா அபாசு தன்னுடைய அரச தலைநகரை வட-மேற்கு நகரான குவாசுவின்னை இசபகானுக்கு நகர்த்தத் தீர்மானித்தபோது, முற்றிலும் ஒரு நகரை மீள் உருவாக்கும் பாரிய நிகழச்சித்திட்டங்களில் ஒன்றை பாரசீக வரலாற்றில் முன்னெடுத்தார். இசபகான் மத்திய நகரை தெரிவு செய்கையில், "வாழ்வு கொடுக்கும் ஏரி" என்று சொல்லப்படும் சாயான்தேயினால் வளமூட்டப்பட்ட, வலுவான பயிர்ச்செய்கையின் பாலைவனச் சோலைத் திகழ்ந்த மழையற்ற நிலப்பரப்பின் பரந்த பகுதியின் மத்தியில், அபாசு உதுமானியப் பேரரசு, உசுபெக்கு ஆகியோரால் எதிர்காலத்தில் தாக்குதலிலிருந்து விலகியிருக்க தொலைவில் அமைத்தார். அத்துடன் பாரசீக வளைகுடா மீது அதிக கட்டுப்பாட்டையும் கொண்டார். இது விரைவில் இடச்சு, பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் என்பவற்றின் முக்கிய வாணிகப் பாதையாக மாறியது.[3]
இதன் பிரதான கட்டடக்கலைஞரான சாயக் பாய்,[4] சா அப்பாசின் இரு முக்கிய முதன்மைத்திட்டங்கள் மீது கவனத்தைக் கொண்டிருந்தார். அவையாவன: எல்லா வெளிநாட்டு புகழ்மிக்கவர்களின் வாழ்விடம் உட்பட்ட, நகரத்தின் முக்கிய நிறுவனங்களால் சூழப்பட்ட சகர் பா வளாகம், மற்றும் இமாம் சதுக்கம் அல்லது நகசு சகான் சதுக்கம் ("உலக சதுக்கத்தின் உருவம்").[5] சா ஆட்சிக்கு வரமுன்னர், பாரசீகம் அதிகாரக் கட்டமைப்பை குறைத்திருந்தது. அதனால், வேறுபட்ட அமைப்புகள் அதிகாரத்திற்காக சண்டையிட்டன. அவற்றில் தரைப்படை, பல்வேறு மாகாணங்களில் இருந்து பேரரசை முழுமைபெறச் செய்த ஆளுனர்களும் ஆகியோர் அதில் ஈடுபட்டனர். சா அப்பாசு இந்த அரசியல் கட்டமைப்பை வலுவிழக்கச் செய்து, பாரசீகத்தின் பெரும் தலைநகராக இசபகானை மீள் உருவாக்க விரும்பியது அதிகாரத்தை மையப்படுத்தலில் முக்கிய பகுதியாக இருந்தது.[6] பாரசீகத்தின் மூன்று பிரதான பகுதிகளான மச்சித்து இ சாவினைப் பிரதிநிதுத்துவப்படுத்திய சமயக் குருக்களின் அதிகாரம், பேரரசு அங்காடியை பிரதிநிதுத்துவப்படுத்திய வர்த்தகர்களின் அதிகாரம், அலி கபு அரண்மனையில் உள்ள சாவின் அதிகாரம் என்பவை ஒன்றாக இருக்க சதுக்கத்தின் கூர்மதி கட்டப்பட்டது.
Remove ads
அரச சதுக்கம்
அரச சதுக்கம் "சா"வும் மக்களும் சந்திக்கும் இடமாகும்.
இவற்றையும் பார்க்க
உசாத்துணை
அகலக்காட்சி
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads