இயக்கம் (திரைப்படம்)

சஞ்சய் ராம் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

இயக்கம் (Iyakkam) என்பது 2008 ஆம் ஆண்டு வெளியான தமிழ் அதிரடித் திரைப்படமாகும். சஞ்சய் ராம் தயாரித்து இயக்கிய இப்படத்தில் புதுமுகம் ரிஷி குமார், ஸ்ருதி ராஜ் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடிக்க, சுஜிபாலா, சஞ்சய் ராம், சுதாகர் வசந்த், ஆர். சுந்தர்ராஜன், சிட்டி பாபு, எம். எசு. பாசுகர், பூவிலங்கு மோகன் ஆகியோர் துணை பாத்திரங்களில் நடித்தனர். இந்த படத்திற்கு பிரவீண் மணி இசை அமைத்தார். படமானது 25 ஏப்ரல் 2008 அன்று வெளியானது.[1][2][3]

விரைவான உண்மைகள் இயக்கம், தயாரிப்பு ...
Remove ads

நடிகர்கள்

தயாரிப்பு

தூத்துக்குடி (2006), ஆடு புலி ஆட்டம் (2006), வீரமும் ஈரமும் (2007) போன்ற படங்களை இயக்கிய சஞ்சய் ராம் அடுத்து இயக்கம் என்ற படத்தை தனது புதிய சொந்த பதாகையான லிங்கம் தியேட்டர்சின் கீழ் தயாரித்து, இயக்கினார். முன்னாள் தமிழ்நாடு துடுப்பாட்ட வீரரான ரிஷி குமார் ஒரு குடிசைவாசியாகவும், மாவட்ட ஆட்சியராகவும் நடிக்க ஒப்பந்தமானார். கூத்துப்பட்டறையில் அவர் சிலகாலம் பணியாற்றியுள்ளார். இயக்குநர் வின்சென்ட் செல்வாவிடம் ஒரு காலத்தில் இணை இயக்குநராக இருந்த சஞ்சய் ராம், “நான் பாலிவுட் திரைப்பட படைப்பாளியான ராம் கோபால் வர்மாவின் தீவிர ரசிகன். அவரது திரைப்படப் படைப்பில் நான் ஈர்க்கப்பட்டேன். நான் அவரை பின்பற்ற விரும்புகிறேன் " என்றும், “தரமே எனது குறிக்கோள். தமிழ்த் திரைப்படத் துறையில் தரமான பொழுதுபோக்கு படங்களை வழங்க விரும்புகிறேன் " என்றும் கூறியுள்ளார்.[4][5]

Remove ads

இசை

திரப்பட பின்னணி இசை, பாடல்கள் ஆகியவற்றுக்கு இசையமைப்பாளர் பிரவீண் மணி இசையமைத்தார். இந்த இசைப்பதிவில் இளைய கம்பன் எழுதிய ஆறு பாடல்கள் உள்ளன. இந்த படத்தின் இசை வெளியீடானது30 மார்ச் 2008 அன்று நடிகர்கள் ஷாம், சூரியா ஆகியோரால் சென்னையில் வெளியிடப்பட்டது.[6][7][8]

மேலதிகத் தகவல்கள் எண், பாடல் ...

வரவேற்பு

தி இந்து பத்திரிகையின் எஸ். ஆர். அசோக் குமார் படத்தின் நகைச்சுவைப் பகுதியை விமர்சித்தார், ஆனால் கலைஞர்களின் நடிப்பையும், ஒளிப்பதிவையும் பாராட்டினார். மேலும் "பலவீனமான திரைக்கதை படத்தின் கருத்தாக்கத்தை நீர்த்துப்போகச் செய்கிறது" என்றும் கூறினார்.[9] மற்றொரு விமர்சகர் இந்த படத்துக்கு 5 க்கு 2 என மதிப்பீடு அளித்து, "இயக்குநர் சஞ்சய் ராம் சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டார், மேலும் படம் கூட்டம் சேர்க்கும்" என்று எழுதினார்.[10]

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads