இரகுவம்சம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இரகுவம்சம் என்னும் காவியம் சமஸ்கிருத மொழியில் மகாகவி காளிதாசன் இயற்றியதாகும்.

இரகுவின் மரபினைப் பாடுவது இரகுவம்சம் ஆகும். இரகுவின் தந்தை திலீபன் வரலாற்றுடன் ஆரம்பமாகும் இக்காவியம் திலீபன், இரகு, அயன், தசரதன், இராமன், குசன் என்போரின் வரலாறுகள் விரிவாகக் கூறப்படுகின்றன. அத்துடன் குசன் பின் வந்த அதிதி முதல் அக்கினி, வருணன் வரையான இருபத்து மூவர் வரலாறுகள் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன. நூலில் இறைவணக்கமாக சிவனைப்பற்றி பாடியிள்ளார். இரகுவசம்சத்தில் முதல் சுலோகத்தில் சிவனும் பார்வதியும் சொல்லும் பொருளும்போல் சேர்ந்திருக்கிறார்கள் என்ற உவமையோடு அவர்களைக் குறிப்பிடுகிறார்.[1]

Remove ads

இரகுவம்சத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு

அரசகேசரி

இரகுவம்சத்தினைத் தமிழில் முதன் முதலில் பாடியவர் கி.பி. 16 - 17 நூற்றாண்டுகளில் ஈழத்தில் வாழ்ந்த அரசகேசரி என்னும் அரச குடும்பத்துப் புலவராவார். இது 1887 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பதிப்பிக்கப்பட்டது.

சி. கணேசையர்

புன்னாலைக்கட்டுவன் சி. கணேசையர் முதற் பதினாறு படலங்களுக்கு எழுதிய உரை 1915 இலும் 1932 இலும் பதிப்பிக்கப்பட்டுள்ளன.

அ. குமாரசாமிப் புலவர்

சுன்னாகம் அ. குமாரசாமிப் புலவர் எழுதிய இரகுவம்ச சரிதாமிர்தம் 1930 இல் வெளிவந்தது.

இரா. இராகவையங்கார்

வித்துவான் ரா. இராகவையங்கார் (1870-1946) சில சருக்கங்களைத் தமிழில் மொழிபெயர்த்துப் பாடியுள்ளார்.

வ. கணபதிப்பிள்ளை

புலோலியூர் வ. கணபதிப்பிள்ளை (இ. 1895) வசன நடையில் எழுதினார். முதலைந்து சருக்கத்தின் மொழிபெயர்ப்பு சென்னையில் 1874 இலே வெளிவந்தது.

Remove ads

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads