இரட்யார்ட் கிப்ளிங்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜோசப் இரட்யார்ட் கிப்ளிங் (Joseph Rudyard Kipling - RUD-yərd; 30 திசம்பர் 1865 - 18 சனவரி 1936) [1] பிரித்தானிய இந்தியாவில் பிறந்த ஓர் ஆங்கிலப் புதின, சிறுகதை எழுத்தாளர், கவிஞர் மற்றும் பத்திரிகையாளர் ஆவார். பிரித்தானிய இந்தியாவின் தாக்கம் இவரது படைப்புகளில் இருந்தது.
கிப்லிங்கின் புனைகதை படைப்புகளில் ஜங்கிள் புக்கின் இரு படைப்புகள் ( தி ஜங்கிள் புக், 1894; தி செகண்ட் ஜங்கிள் புக், 1895), கிம் (1901), ஜஸ்ட் சோ ஸ்டோரிஸ் (1902) மற்றும் " தி மேன் ஹூ வுட் பி கிங் " (1888) உட்பட பல சிறுகதைகள் அடங்கும் [2] இவரது கவிதைகளில் " மண்டலே " (1890), " குங்கா தின் " (1890), "தெ காட்ஸ் ஆஃப் தெ காபிபுக் ஹெடிங்ஸ் " (1919), " தி ஒயிட் மேன்ஸ் பர்டன் " (1899), மற்றும் " இஃப்- " (1910) ஆகியவை அடங்கும். சிறுகதை கலையில் புதுமையான படைப்புகளை வழங்கியுள்ளார்.[3] குழந்தைகளுக்கான இவரது நூல்கள் தொன்மைய இலக்கிய வகையினைச் சேர்ந்தது. ஒரு விமர்சகர் இவரை " பல்துறை மற்றும் சிறப்பாக எடுத்துரைக்கும் பாணி கொண்டவர்" என்று குறிப்பிட்டார்.[4][5]
Remove ads
குழந்தைப் பருவம் (1865–1882)

இரட்யார்ட் கிப்ளிங் திசம்பர் 30, 1865இல் மும்பையில் (பிரித்தானிய இந்தியாவின் பம்பாய் மாகாணத்தில்), ஆலிசு கிப்லிங் மற்றும் ஜான் லாக்வுட் கிப்லிங் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.[6] ஆலிசு, நான்கு மெக்டொனால்டு சகோதரிகளில் ஒருவர்.[7] இவர் துடிப்பான பெண் ஆவார்.[8] இலார்ட் டஃபெரின் இவரைப்பற்றி குறிப்பிடுகையில், "சோர்வும் திருமதி கிப்லிங்கும் ஒரே அறையில் இருக்க முடியாது" என்று கூறுவார்.[3][9][10] ஜான் லாக்வுட் கிப்லிங், ஒரு சிற்பி மற்றும் மட்பாண்ட வடிவமைப்பாளர் ஆவார். மும்பையில் புதிதாக நிறுவப்பட்ட சர் ஜம்செட்ஜீ ஜீஜேபாய் கலைப் பள்ளியின் கட்டிடக்கலை சிற்பத் துறையின் முதல்வர் மற்றும் பேராசிரியராக இருந்தார்.[8]
ஜான் லாக்வுட் மற்றும் ஆலிசு 1863இல் சந்தித்தனர். ஜான் லாக்வுட் கலைப் பள்ளியில் பேராசிரியராகப் பதவி ஏற்ற பிறகு 1865இல் இவர்கள் திருமணம் செய்துகொண்டு இந்தியாவுக்குச் சென்றனர்.[11] இரட்யார்ட் ஏரிப் பகுதியின் அழகைக் கண்டு மிகவும் நெகிழ்ந்து போன இவர்கள், தங்கள் முதல் குழந்தைக்கு ஜோசப் இரட்யார்ட் என்று பெயரிட்டனர். ஆலிஸின் சகோதரிகள் இருவரும் கலைஞர்களை மணமுடித்தனர், ஜார்ஜியானா, ஓவியர் எட்வர்ட் பர்ன்-ஜோன்சையும் ஆக்னசு எட்வர்ட் பாய்ண்டரையும் மணமுடித்தனர். மூன்றாவது சகோதரி, லூயிசா, கிப்லிங்கின் மிக முக்கிய உறவினரான ஸ்டான்லி பால்ட்வினின் தாய் வழி உறவினர் ஆவார், இவர் 1920கள் மற்றும் 1930களில் மூன்று முறை ஐக்கிய இராச்சியத்தின் கன்சர்வேடிவ் பிரதம மந்திரியாக இருந்தார்.[12]
Remove ads
இந்தியா திரும்பிய பின்னர்
இவரது பள்ளிப் படிப்பின் முடிவில், கிப்ளிங்கிற்கு உதவித்தொகையில் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் சேருவதற்கான கல்வித் திறன் இல்லை என்று முடிவு செய்யப்பட்டது.[13] இவருக்கு நிதியுதவி அளிக்க இவரது பெற்றோருக்கு போதுமான வசதி இல்லை.[8] அதனால் கிப்லிங்கின் தந்தை லாகூரில் இவருக்கு வேலை வாங்கித் தந்தார், இவரது தந்தை லாகூரின் தேசிய கலைக் கல்லூரியில் முதல்வராகவும் லாகூர் அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளராகவும் பணியாற்றினார். செப்டம்பர் 20,1882 இல் இந்தியாவுக்குப் பயணம் செய்து அக்டோபர் 18 அன்று மும்பைக்கு வந்தார்.
Remove ads
ஆரம்பகால தொழில் வாழ்க்கை (1882-1914)
1883 முதல் 1889 வரை, கிப்ளிங் பிரித்தானிய இந்தியாவின் லாகூரில் உள்ள படைத்துறை மற்றும் இராணுவ அரசிதழ், அலகாபாத்தில் உள்ள தி பயனியர் போன்ற உள்ளூர் செய்தித்தாள்களில் பணியாற்றினார்.[14]

சான்றுகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads