இரண்டாம் இரத்னதேவன்
இரத்தினபுரி காலச்சூரி வம்சத்தின் 6வது அரசன் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரண்டாம் இரத்னதேவன் (Ratnadeva II; ஆட்சி. 1120-1135 பொ.ச.) நவீனகால இந்திய மாநிலமான சத்தீசுகரில் இருந்த ( இரதன்பூர், சத்தீசுகர்) இரத்தினபுரியின் காலச்சூரி வம்சத்தின் மிகப்பெரிய ஆட்சியாளனாவான். [1] திரிபுரியின் [2] காலச்சூரி ஆட்சியாளர்களிடமிருந்து]] சுதந்திரம் அறிவித்ததற்காக இவன் அறியப்படுகிறான். மேலும் காலச்சூரி மன்னன் கயகர்ணனால் அனுப்பப்பட்ட இராணுவத்தை தோற்கடித்தான்.[2] கலிங்கத்தின் வலிமைமிக்க மன்னன் அனந்தவர்மன் சோடகங்கனின் படையெடுப்பை முறியடித்ததற்காகவும் இவன் அறியப்படுகிறான். [3] இந்த நிகழ்வுகள் இவன் அநேகமாக ஒரு திறமையான இராணுவத் தலைவன் என்பதைக் காட்டுகிறது. இவனது தந்தை முதலாம் ஜஜல்லதேவன் பொ.ச.1090-1120 வரை ஆட்சி செய்தான். இவனுக்குப் பிறகு இவனது மகன் இரண்டாம் பிருதிவிதேவன் பொ.ச. 1135-1165 வரை ஆட்சி செய்தான்.[4]
Remove ads
கல்வெட்டுகளும் நாணயங்களும்
இரண்டாம் இரத்னதேவனின் கல்வெட்டுகள் அகல்தாரா, பராகான், சிவ்ரிநாராயண் (அல்லது சியோரிநாராயண்), சர்கோன் (அல்லது சர்கோ) ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. [5] [6]

இரண்டாம் இரத்னதேவனின் பல நாணயங்கள் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன: [7]
- சனாசாரி (அல்லது சோன்சாரி): 96 தங்க நாணயங்கள்
- சரங்கர்: 29 தங்க நாணயங்கள்
- தாடல்-சியோனி: 136 தங்க நாணயங்கள்
- இரதன்பூர் : 10 தங்க நாணயங்கள்
- சோன்பூர் மற்றும் பைத்யநாதா: 9 தங்க நாணயங்கள்
Remove ads
இதனையும் பார்க்கவும்
- இரத்தினபுரியின் காலச்சூரிகள்
- அனந்தவர்மன் சோடகங்கன்
- திரிபுரியின் காலச்சூரிகள்
- கயகர்ணன்
சான்றுகள்
உசாத்துணை
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads