இரண்டாம் பிருதிவிதேவன்
இரத்தினபுரி காலச்சூரி மன்னன் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பிருத்வி-தேவன் ( Prithvi-deva II) இன்றைய இந்திய மாநிலமான சத்தீசுகரை கிபி 1135-1165 வரை ஆட்சி செய்த[1] இரத்தினபுரி காலச்சூரி மன்னர்களில் மிகவும் சக்திவாய்ந்தவராவார்.
Remove ads
ஆட்சி
இவரது தந்தையும் புகழ்பெற்ற அரசனுமான இரண்டாம் இரத்னதேவன், கீழைக் கங்க மன்னன் அனந்தவர்மன் சோடகங்கனை தோற்கடித்தார். இவரும் கீழைக் கங்க அரசனான ஏழாம் கர்மதேவனைத் தோற்கடித்தார்.[2] கர்மதேவன் இவருக்கு எதிராக ஒரு மோசமான தோல்வியை சந்தித்தார். [3] திரிபுரியின் காலச்சூரி மன்னன், செயசிம்மன், இவர் மீது தனது அதிகாரத்தை நிலைநாட்ட முயன்று தோல்வியடைந்தார்.[4] சிவ்ரிநாராயணன் என்ற இடத்தில் ஒரு போர் நடந்தது. அதில் செயசிம்மன் தோல்வியடைந்ததாகத் தெரிகிறது.[4]
Remove ads
பிருத்விதேவனின் பிலாய்கர் செப்புத் தகடுகள்
மத்தியப் பிரதேசத்தில் இருந்த சத்தீசுகர் பிரிவின் ராய்ப்பூர் மாவட்டத்தின், முன்னாள் பிலாய்கர் ஜமீந்தாரியின் தலைமை நகரமான பிலாய்கரில் 1945இல் இரண்டு செப்புத் தகடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் இவரைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.[5]
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads