கயகர்ணன்

காலச்சூரி மன்னன் From Wikipedia, the free encyclopedia

Remove ads

கயகர்ணன் (Gayakarna; ஆட்சி, பொ.ச 1123-1153 ) திரிபுரியை ஆட்சி செய்த காலச்சூரி வம்சத்தின் ஆட்சியாளனாவான். இவனது இராச்சியம், மத்திய இந்தியாவிலிருந்த ( இன்றைய மத்தியப் பிரதேசம் ) சேதி நாடு அல்லது தஹாலா பகுதியை மையமாகக் கொண்டிருந்தது.

விரைவான உண்மைகள் கயகர்ணன், தஹாலாவின் மன்னன் ...

கயகர்ணன் பரமார மன்னன் உதயாதித்தனின் பேத்தி அல்கனாதேவியை மணந்தான். இது இரு இராச்சியங்களுக்கிடையில் சமாதானத்திற்கு வழிவகுத்தது. இருப்பினும், இவன் சந்தேல மன்னன் மதனவர்மனிடம் சில பிரதேசங்களை இழந்தான். இவனது ஆட்சியின் போது இரத்தினபுரியில் உள்ள காலச்சூரி ஆட்சியாளர்கள் தங்கள் சுதந்திரத்தை அறிவித்தனர்.

Remove ads

ஆட்சி

கயகர்ணன் தனது தந்தை யசகர்ணனுக்குப் பிறகு காலச்சூரி மன்னரானான்.[1]கயகர்ணன் சந்தேல மன்னன் மதனவர்மனிடம் தனது வடக்குப் பகுதியின் சில பகுதிகளை இழந்ததாகத் தெரிகிறது. மதனவர்மனின் மந்திரி கடாதரனின் மவூ கல்வெட்டு, மதனவர்மனின் பெயரைக் கேட்டு மன்னன் ஓடிவிட்டதாகக் கூறுகிறது. இந்த பகுதியில் உள்ள பன்வாரில் மதனவர்மனின் நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, சந்தேலர்கள் பகேல்கண்டின் வடக்குப் பகுதியைக் கைப்பற்றியதாகத் தெரிகிறது.[2] [3]

முன்னதாக திரிபுரி காலச்சூரிகளின் அடிமைகளாக பணியாற்றிய இரத்தினபுரியின் காலச்சுரிகள் கயகர்ணனின் ஆட்சியின் போது தங்கள் சுதந்திரத்தை அறிவித்தனர். கயகர்ணன் இரத்தினபுரியின் தலைவன் இரண்டாம் இரத்னதேவனை அடிபணியச் செய்ய ஒரு படையை அனுப்பினான். ஆனால் அது தோற்கடிக்கப்பட்டது. [1]

Remove ads

சொந்த வாழ்க்கை

கயகர்ணன் குஹில மன்னன் விசயசிம்மனின் மகளான அல்கனாதேவியை மணந்தான். இவரது தாயார் சியாமளாதேவி பரமார மன்னன் உதயாதித்யனின் மகளாவாள். இத்திருமணம் பரமாரர்களுக்கும் காலச்சூரிகளுக்கும் இடையே சமாதானத்தை ஏற்படுத்தியது. [1]

அல்கனாதேவியின் ஆதரவின் காரணமாக, பாசுபத சைவ மதத் தலைவர்கள் கலாச்சூரி சாம்ராஜ்யத்தில் முக்கியத்துவம் பெற்றனர். [1] கயகர்ணனின் இராஜகுரு (அரச ஆசான்) சக்தி-சிவன் என்பவராவார். [4]

கயகர்ணனுக்குப் பின் இவனது மகன்களான நரசிம்மனும், பின்னர் செயசிம்மனும் ஒருவர் பின் ஒருவராக பதவியேற்றனர். [1]

Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads