இரண்டாம் கொங்கா

தெலுங்கு அரசர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

இரண்டாம் கொங்கா என்பவர் ஒரு தெலுங்கு அரசராவார். இவர் வேலநாட்டி சோடர்கள் மரபின் மன்னராக 1132 முதல் 1161 வரை ஆண்டார்.

விரைவான உண்மைகள் வெலநாடு துர்ஜய தலைவர்கள் ...

இரண்டாம் கொங்கா அவரது தந்தை முதலாம் இராசேந்திர சோடாவுக்குப் பிறகு அரியணை ஏறினார். இவர் சோடர் மன்னர்களில் தலை சிறந்தவராக கருதப்படுகிறார். இவர் தனது தந்தையின் ஆட்சியின் போது நடந்த போர்களில் தளபதியாக இருந்து போர்புரிந்துள்ளார். புகழ்பெற்ற கோதாவரி போர் போன்ற பல போர்களில் இவர் இரண்டாம் குலோத்துங்கனுடன் சென்றார். இதன் விளைவாக அனைத்து பகுதிகளையும் மேலைச் சாளுக்கியர்களிடமிருந்து மீட்டெடுத்தார். நெல்லூர் சோழர், கொனிடேனா சோடர் போன்ற பல கிளர்ச்சித் தலைவர்களை இவர் நசுக்கினார். இவரது இராச்சியம் வடக்கில் மகேந்திரகிரிக்கும் [disambiguation needed] தெற்கில் ஸ்ரீசைலம் ஆகியவற்றுக்கும் இடையில் இருந்தது. இரண்டாம் கொங்கா சாளுக்கியராஜ்ய முலஸ்தம்பா போன்ற பல பட்டங்களை ஏற்றிருந்தார்.

Remove ads

குறிப்புகள்

  • துர்கா பிரசாத், கி.பி 1565 வரை ஆந்திராவின் வரலாறு, பி.ஜி. வெளியீட்டாளர்கள், குண்டூர் (1988)
  • தென்னிந்திய கல்வெட்டுகள் - http://www.whatisindia.com/inscription/
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads