முதலாம் இராசேந்திர சோடர்
ஆந்திர மன்னர்கள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
முதலாம் இராசேந்திர சோடா என்பவர் ஒரு தெலுங்கு மன்னராவார். கி.பி 1108 முதல் 1132 வரை ஆட்சி செய்த இவர் வேலநாட்டி சோடர் மரபின் இரண்டாவது ஆட்சியாளர் ஆவார்.
ராஜேந்திர சோடா தனது தந்தை கொங்காவுக்குப் பிறகு ஆட்சியாளராக பொறுப்பேற்றார். தன் தந்தையின் வழியில் சோழ வம்சத்திடம் தனது விசுவாசத்தைத் தொடர்ந்தார். கி.பி 1115 இல் இவர் மேலைச் சாளுக்கிய ஆறாம் விக்ரமாதிதனின் தளபதியான அனந்தபாலயாவால் தோற்கடிக்கப்பட்டார். இதனால் முதலாம் இராசேந்திர சோடா மேலைச் சாளுக்கியர்களின் மேலாண்மையை ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன்பிறகும் மேலைச் சாளுக்கியர்கள் தங்கள் வெற்றியைத் தொடர்ந்தனர் மேலும் விசயவாடா, கொண்டப்பள்ளி, ஜனநாதபுரம் உள்ளிட்ட தெலுங்கு நாட்டின் பெரும்பகுதியை வெல்லத் தொடங்கினர், அவர்கள் காஞ்சி வரை அணிவகுத்து அதைச் சூறையாடினர்.
ஆறாம் விக்ரமாதினுக்குப் பிறகு மேலைச் சாளுக்கிய மன்னனாக கி.பி 1126 இல் மூன்றாம் சோமேசுவரான் அரியனைக்கு வந்தார். முதலாம் இராஜேந்திர சோடா கல்யாணி சாளுக்கியர்களுக்கு விசுவாசமாக இருந்துவந்தார். வேங்கியைச் சேர்ந்த மல்லா பூபதி கிருஷ்ணா ஆற்றின் கரையின் சில பகுதிகளை மீட்டெடுத்தார், ஆனால் வேலந்தி சோடர்கள் இந்த போர்களில் இரண்டாம் சோமேஸ்வராவின் பாடம் கற்றனர். இருப்பினும், கி.பி 1132 இல், இவர் சோழ வம்சத்தின் தரப்போடு சேர்ந்து போராடினார். விக்ரம சோழன் அவரது மகன் இரண்டாம் குலோத்துங்கனின் தலைமையில், தன் சேனைகளை அனுப்பினார். வேலந்து சோடர்கள் உட்பட பல தலைவர்கள் அவருடன் கைகோர்த்து மன்னெரு போரில் மேலைச் சாளுக்கியர்களை விரட்ட உதவினர்.
Remove ads
குறிப்புகள்
- துர்கா பிரசாத், கி.பி 1565 வரை ஆந்திராவின் வரலாறு, பி.ஜி. பப்ளிஷர்ஸ், குண்டூர் (1988)
- தென்னிந்திய கல்வெட்டுகள் - http://www.whatisindia.com/inscription/
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads