இரண்டாம் யசோவர்மன் (சந்தேல வம்சம்)

சந்தேல மன்னன் From Wikipedia, the free encyclopedia

Remove ads

இரண்டாம் யசோவர்மன் (Yashovarman II ; ஆட்சி 1164-1165 பொ.ச.) என்பவர் இந்தியாவின் மத்தியப் பகுதியை ஆண்ட சந்தேல வம்சத்தின் அரசனாவார். செகசபுக்தி பிராந்தியத்தின் (இன்றைய மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள புந்தேல்கண்ட் ஆட்சியாளராக இருந்தார். முந்தைய யசோவர்மனிலிருந்து இவரை வேறுபடுத்துவதற்காக இரண்டாம் யசோவர்மன் என்று அழைக்கப்பட்டார்.

விரைவான உண்மைகள் Yashovarman, புந்தேல்கண்டின் மன்னன் ...

யசோவர்மன் சந்தேல மன்னன் மதனவர்மனின் மகனாவார். இவரது சொந்த மகன் பரமார்த்தி தேவனின் பட்டேசுவரக் கல்வெட்டில் இவரைப் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மற்ற சந்தேலக் கல்வெட்டுகள் சந்தேல மன்னர்களின் பட்டியலில் இவரது பெயரைக் குறிப்பிடவில்லை. வரலாற்றாசிரியர் எஸ். கே. மித்ராவின் கூற்றுப்படி, பட்டேசுவரக் கல்வெட்டு, யசோவர்மன் மிகக் குறுகிய காலம் சந்தேலர்களின் சிம்மாசனத்தில் ஏறியதைத் தெளிவாகக் குறிக்கிறது. இது யசோவர்மனை "மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் சிறந்த ஆட்சியாளர்களின் ஆபரணம்" என்று விவரிக்கிறது. மித்ரா இவரது குறுகிய ஆட்சிக்காலத்தில் குறிப்பிடத்தக்க சாதனை எதையும் காணாததால் மற்ற கல்வெட்டுகள் இவரது பெயரைத் தவிர்த்துவிட்டதாகக் கருதுகிறார். [1]

மறுபுறம், வரலாற்றாசிரியர் ஆர். கே. தீட்சித், "சிறந்த ஆட்சியாளர்களின் ஆபரணம்" என்ற அடைமொழி வெறும் சொல்லாட்சி என்று நம்புகிறார். யசோவர்மனின் தந்தை மதனவர்மனின் (பொ.ச. 1063) கடைசியாக அறியப்பட்ட தேதிக்கும், அவரது மகன் பரமார்த்தி தேவனின் (பொ.ச. 1066) அறியப்பட்ட முந்தைய தேதிக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. பட்டேசுவரக் கல்வெட்டைத் தவிர மற்ற கல்வெட்டுகள், பரமார்த்தியால் வெளியிடப்பட்டவை உட்பட, பரமார்த்தி தேவன் மதன்வர்மனுக்குப் பிறகு வந்ததாகக் கூறுகின்றன. தந்தை மதன்வர்மன் உயிருடன் இருக்கும்போதே யசோவர்மன் இறந்திருக்கலாம். [2]

இடைக்கால புராண உரையான பரமலா ராசோவின் படி, பரமார்த்தி தனது 5 வயதில் சந்தேல சிம்மாசனத்தில் ஏறினார். இது யசோவர்மன் அகால மரணமடைந்ததாகவும் கூறுகிறது. [3]

Remove ads

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads