யசோவர்மன் (சந்தேல வம்சம்)
சந்தேல மன்னன் From Wikipedia, the free encyclopedia
Remove ads
யசோவர்மன் (Yashovarman; ஆட்சி 925–950 பொ.ச.) மேலும் இலக்சவர்மன் என்றும் அழைக்கப்படும் இவர், இந்தியாவின் மத்தியப் பகுதியை ஆண்ட சந்தேல வம்சத்தின் அரசனாவார். செகசபுக்தி பிராந்தியத்தின் (இன்றைய மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் உள்ள புந்தேல்கண்ட்) ஆட்சியாளராக இருந்தார். கூர்ஜர-பிரதிகாரர்களின் மேலாதிக்கத்தை இவர் முறையாக ஒப்புக்கொண்ட போதிலும், அவர் நடைமுறையில் சந்தேலர்களை ஒரு இறையாண்மை சக்தியாக நிறுவினார். கலஞ்சராவைக் (நவீன கலிஞ்சர் ) கைப்பற்றியது இவரது முக்கிய இராணுவ சாதனைகும். கஜுராஹோவில் உள்ள லட்சுமண கோவிலை கட்டியெழுப்பியதற்காகவும் இவர் குறிப்பிடத்தக்கவர்.


கன்னியாகுப்ஜத்தின் (கன்னோசி) கூர்ஜரா-பிரதிகாரர்களின் நிலப்பிரபுவாக இருந்த சந்தேலா ஆட்சியாளரான ஹர்ஷனுக்கு யசோவர்மன் பிறந்தார். இவரது தாயார் கஞ்சுகா, சகமான குடும்பத்திலிருந்து வந்தவர். யசோவர்மன் பதவியேற்ற நேரத்தில், பிரதிகாரர்கள் தங்கள் நிலப்பிரபுத்துவத்தை அதிக அளவில் நம்பியிருந்தனர். பிரதிகாரர்களின் முக்கிய எதிரியாக இருந்த இராஷ்டிரகூடர்கள் வம்ச சண்டைகளில் மும்முரமாக இருந்தனர். இது சந்தேலர்களுக்கு தங்கள் சொந்த சக்தியை அதிகரிக்க வாய்ப்பளித்தது. யசோவர்மன் பிரதிகாரர்களுடனான விசுவாசத்தை முறையாகக் கைவிடவில்லை. ஆனால் அவர் நடைமுறையில் சுதந்திரமாக இருந்தனர்.[1]
Remove ads
சொந்த வாழ்க்கை
யசோவர்மனின் ஆட்சியானது புகழ்பெற்ற சந்தேலர்களின் காலத்தின் கலை மற்றும் கட்டிடக்கலையின் தொடக்கத்தைக் குறித்தது. இவர் தனது தேவபாலனிடமிருந்து வைகுண்ட விஷ்ணுவின் மதிப்புமிக்க சிலையை வாங்கினார். மேலும் கஜுராஹோவில் உள்ள இலக்குமணன் கோயிலில் அந்த சிலையை நிறுவினார். கஜுராஹோவில் உள்ள இந்துக் கோயில் கட்டிடக்கலைக்கு இதுவே ஆரம்பகால உதாரணம். [2] கஜுராஹோவில் உள்ள ஏரிகளில் ஒன்றின் மூலம் அடையாளம் காணக்கூடிய ஒருஏரியை இவர் கட்டியதாகவும் கூறப்படுகிறது. [3]
Remove ads
சான்றுகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads