இரண்டாம் ராமேசஸ் சிலை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரண்டாம் ராமேசஸ் சிலை, (Statue of Ramesses II) புது எகிப்திய இராச்சியத்தை 66 ஆண்டுகள் ஆண்ட 19வது வம்சத்தின் மூன்றாவது மன்னர் இரண்டாம் ராமேசஸ் ஆவார். (ஆட்சிக் காலம் கிமு 1279 – கிமு 1213). இவரது சிறந்த ஆட்சிக் காலத்தை எகிப்தியவியல் அறிஞர்கள் ராமேசியம் காலம் என்பர்.


எகிப்தின் மெம்பிஸ் நகர தொல்லியல் அகழாய்வின் போது, 1820-ஆம் ஆண்டில் ஜியோவானி பாட்டிஸ்டா கேவிக்லியா எனும் தொல்லியல் அறிஞரால் மிகப்பெரிய இரண்டாம் ராமேசஸ் சிவப்பு கருங்கல் சிலை 6 துண்டுகளாக உடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது இதன் எடை 83 டன்கள் ஆகும்.
1955 இல் எகிப்தின் பிரதமர் ஜமால் அப்துல் நாசிர் ஆணையின் பேரில் இரண்டாம் ராமேசஸ் சிலை கெய்ரோ தொடருந்து நிலைய சதுக்கத்தில் இடம் மாற்றப்பட்டது. சிலையை நிறுவிய இடத்திற்கு ராமேசஸ் சதுக்கம் எனப்பெரியப்பட்டது.[1]இவ்விடத்தில் ராமேசஸ் சிலையை முதல் முறையாக மறுசீரமைப்பு செய்தனர். 3 மீட்டர் உயரம் கொண்ட பீடத்தின் மீது 11 மீட்டர் உயரத்தில் சீரமைப்பு செய்த ராமேசஸ் சிலையை நிறுவினர். சிலையின் உடற்பகுதிகளில் இரும்பு கம்பிகளைக் கொண்டு வலு சேர்த்தனர்.[2]
காலப்போக்கில் சிலைக்கு ராம்சேஸ் சதுக்கம் ஒரு பொருத்தமற்ற இடமாக மாறியது. 2006-ஆம் ஆண்டு எகிப்திய அரசாங்கம் அதை மிகவும் பொருத்தமான இடத்திற்கு மாற்ற முடிவு செய்தது. கீசா நகரத்தின் பெரும் எகிப்திய அருங்காட்சியகத்தின் நுழைவாயில் உள்ள மண்டபத்தில் இரண்டாம் ராமசேஸ் சிலை 2018-ஆம் ஆண்டில் மாற்றி நிறுவப்படுவதற்கு முன் சீரமைக்கப்பட்டது. [3][4][5][6][7]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads