இராசாளிப் பருந்து
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராசாளிப் பருந்து (Bonelli's eagle, Aquila fasciata) ஒரு கொன்றுண்ணிப் பறவை. தெற்கு ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய இடங்களில் வாழ்கின்றது. இத்தாலியப் பறவையியலாளர் பிராங்கோ போநெலியை சிறப்பிக்கும் வண்ணம் இப்பறவை போநெலி கழுகு என்றும் அழைக்கப்படுகிறது. A. fasciata இனம் இரு உள்ளினங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: A. f. fasciata, A. f. renschi.

Remove ads
உடலமைப்பும் கள அடையாளங்களும்[2]
கரும்பருந்தை விடச் சற்று பெரிய கழுகு (55 – 67 cm). அகன்ற இறக்கைகள், நீளமான வால், சிறிய, நீட்டிக்கொண்டிருக்கும் தலை. வேகமாக இறக்கைகளை அடித்தபடி பறக்கும், சரிவான திசையில் இறங்குகையில் வேகமாக முன்னேறும். அதிக உயரத்தில் பறக்காது. ஆண், பெண் இரண்டும் பெருமளவில் ஒரே போலிருக்கும். பெண் சிறிது பெரியதாகவிருக்கும்.
வளர்ந்த கழுகு: மேற்பகுதியும் தலையும் கபில நிறம், முதுகில் வெண்திட்டு, சாம்பல் நிற வாலில் மெல்லிய கோடுகளும் முனைக்கு அருகில் பட்டையும் இருக்கும். கீழிருந்து பார்க்கும்போது, வெண்மையான (அல்லது செம்பழுப்பு நிற) அடிப்பகுதியில் கபில நிறக் கீற்றுகள் தெரியும். (பெண் கழுகிற்கு கீற்றுகள் அதிகமாக இருக்கும்)
குழப்பம் விளைவிக்கும் பிற கழுகுகள்: தேன் பருந்து, பெரிய வல்லூறு, நெடுங்கால் வைரி ஆகியவை.
Remove ads
இனப்பெருக்கம்
பெரும்பாலும் வலசை போகாத பறவை; இந்தியாவில் உள்ளூர்ப் பறவையாகவே இது அறியப்படுகிறது[3].
உள்ளினங்கள்
A. f. fasciata காணப்படும் பகுதிகள்:
வடமேற்கு ஆப்பிரிக்கா, ஐபீரிய மூவலந்தீவு (ஸ்பெயின், போர்ச்சுகல் ஒட்டிய பகுதி) வழியாக மத்தியதரைக் கடல் பகுதிகள்; மத்திய கிழக்கு நாடுகள், அரேபியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா வழியாக சில தென்கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் தென்கிழக்கு சீனா.
A. f. renschi காணப்படும் பகுதிகள்:
சிறு சுண்டாத் தீவுகள், தானிம்பார் தீவுகள் (இந்தோனேசியாவைச் சேர்ந்தவை)
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads