இரைனாகாந்தசு நசுடசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இரைனாகாந்தசு நசுடசு (தாவர வகைப்பாட்டியல்: Rhinacanthus nasutus, snake jasmine,[2]) என்ற தாவரயினம் வெப்ப வலய ஆசியத் தாவரமாகும். இது மேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளிலும் காணப்படுகிறது. இதன் வளரியல்பு மெல்லியதாகவும், 1-2 மீட்டர் உயரங்கொண்டு நேராகவும், கிளைகளைக் கொண்டதாகவும், ஓரளவு தண்டுமுடிகளைக் கொண்டும் புதர் வகையில் இருக்கும். இலைகள் நீண்டும் 4–10 செண்டிமீட்டர் நீளமுள்ளதாகவும் குறுகியும் இரு இலை நுனிகளும் குவிந்தும் காணப்படும். இதன் பூங்கொத்து விரவியும், முடிக்கொண்ட பூக்காம்புகளையும், பூக்கள் கொத்தாகவும் காணப்படுகிறது. பூக்கள் பூவிதழ்களைக் கொண்டு, அடி இதழ் வெண்மையாகவும் காணப்படுகிறது. கனியானது கவைப் போன்றும் (club-shaped), நான்கு விதைகளைக் கொண்டுமுள்ளது.[2] பாம்புக் கடிக்கு மருந்தாகப் பயன்படுகிறது.[3]
Remove ads
மேற்கோள்கள்
இதையும் காணவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
