வழக்காறொழிந்த மொழி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வழக்காறொழிந்த மொழி (extinct language) என்பது, பேசுபவர்கள் எவரும் இல்லாத ஒரு மொழி ஆகும். இது இறந்த மொழி என்பதிலிருந்து வேறுபட்டது. இறந்த மொழி என்பது முதன்மை மொழியாக எவராலும் பேசப்படாத ஒரு மொழியைக் குறிக்கும். தகுந்த நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாதவிடத்து, இந்த நூற்றாண்டின் முடிவில், உலகில் தற்போது பேசப்பட்டுவரும் 6000 க்கு மேற்பட்ட மொழிகளில் அரைவாசிக்கு மேல் வழக்கொழிந்து போய் விடலாம் என ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் கூறியுள்ளது[1]. இவ்வாறு மொழிகள் அழிவதனால் பண்பாட்டு வளங்கள் அழிவதுடன், மொழியில் பொதிந்திருக்கக் கூடிய மூதாதையர்களின் அறிவையும், மனித வரலாற்றின் சில பகுதிகளையும் மனிதர்கள் இழக்க வேண்டி நேரிடும்[2]. உலக மொழிகளில் 90 % மான மொழிகள் 2050 ஆம் ஆண்டளவில் அழிந்துவிடும் என ஒரு அறிக்கை கூறுகின்றது[3].

Remove ads

மொழி அழிவு

பொதுவாக ஒரு மொழி இறந்த நிலையில் இருந்து இல்லாதொழியும் நிலைக்கு மாறுவது, அம் மொழி இன்னொரு மொழியால் நேரடியாக முற்றாகவே பதிலிடப்படும்போது நிகழ்கிறது. எடுத்துக் காட்டாக, கொப்டிய மொழி அரபி மொழியாலும், பல தாயக அமெரிக்க மொழிகள் ஆங்கிலம், பிரெஞ்சு, போர்த்துக்கேயம், எசுப்பானியம் ஆகிய மொழிகளாலும் பதிலீடு செய்யப்பட்டன. ஒரு மொழி இன்னொரு புதிய மொழியாகவோ அல்லது ஒரு மொழிக் குடும்பமாகவோ மாறுவதனாலும் மொழி வழக்காறழியக் கூடும். பழைய ஆங்கிலம் அழிந்து போனதை இதற்கு எடுத்துக் காட்டாகக் கொள்ளலாம்.

இறந்த மொழிகள், பேசுவாரின்றிப் போனாலும் கூட, அறிவியல், சட்டம், சமயம் போன்றவை தொடர்பான தேவைகளுக்குப் பயன்படக்கூடும். சமசுக்கிருதம், சிலாவோனியம், அவெசுத்தான், கொப்டியம், பழம் திபேத்திய மொழி, இலத்தீன் போன்றவை புனித மொழிகளாகக் கருதப்பட்டுவரும் இறந்த மொழிகளுட் சிலவாகும். இன்னொரு வகையில் சொல்வதானால், ஒரு மொழி பழங்காலத்தில் மக்களால் பேசப்பட்டிருந்தும், இன்று அதனை மீட்டுருவாக்கம் செய்து, அதில் எழுதுதல், மொழிபெயர்த்தல் போன்றவற்றைச் செய்ய முடியாத நிலை இருக்குமானால் அது வழக்காறொழிந்த மொழியாகும். மாறாக, தற்காலத்தில் பேசுவோர் இல்லாத போதிலும், எழுதுதல், வாசித்தல், மொழிபெயர்த்தல் போன்ற செயல்களைச் செய்யக்கூடிய அளவுக்கு அறியப்பட்டிருக்கும் மொழிகள் இறந்த மொழிகள் எனப்படுகின்றன.

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads