இலப்பைகுடிக்காடு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இலப்பைக்குடிக்காடு (Labbaikudikadu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்தில் உள்ள முதல் நிலை பேரூராட்சி ஆகும்.
Remove ads
அமைவிடம்
பெரம்பலூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த இலப்பைகுடிக்காடு பேரூராட்சி, பெரம்பலூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
பெரம்பலூர்–தென் ஆற்காடு மாவட்ட எல்லையாக அமைந்துள்ள வெள்ளாற்றின் தென் கரையில் அமைந்துள்ளது. மேற்கே திருமாந்துறையும், கிழக்கே கீழக்குடிக்காடும், தெற்கே பென்னக்கோணமும், பெருமத்தூரும், வடக்கே வெள்ளாறும் அதற்கடுத்து கடலூர் மாவட்டத்தின் அரங்கூரும் அமைந்துள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
4.5 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 8 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி குன்னம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், சிதம்பரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரவல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2560 வீடுகளும், 11891 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5][6]
போக்குவரத்து
பேருந்து
இலப்பைக்குடிக்காட்டிலிருந்து சென்னை, திருச்சி , பெரம்பலூர், வ. களத்தூர், தொழுதூர், வைத்தியநாதபுரம், திட்டக்குடி, விருத்தாசலம், அரியலூர் , துங்கபுரம், அத்தியூர், வேப்பூர், குன்னம், கிழுமத்தூர்,சு. ஆடுதுறை ஊராட்சி ஆகிய ஊர்களுக்குச் செல்ல அரசு மற்றும் தனியார் பேருந்து வசதி உள்ளது.
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
- அரியலூர் தொடருந்து நிலையம் (சிற்றுந்தில் 30 நிமிட நேர பயணம்)
அருகிலுள்ள விமான நிலையங்கள்
- திருச்சிராப்பள்ளி பன்னாட்டு வானூர்தி நிலையம் (சிற்றுந்தில் 1 மணி நேர பயணம்)
- சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் (சிற்றுந்தில் 4 மணி நேர பயணம்)
Remove ads
பள்ளிவாசல்கள்
- மேற்கு ஜாமிஆ மஸ்ஜித்
- பந்தே நவாஜ் மஸ்ஜிது (தைக்கால் பள்ளி)
- கிழக்கு ஜூம்மா பள்ளிவாசல்
- கிழக்கு பழைய பள்ளிவாசல்
- பிலால் பள்ளிவாசல்
- தாருஸ்ஸலாம் தவ்ஹீத் பள்ளிவாசல்
- தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பள்ளிவாசல்
கோயில்கள்
- செல்வ விநாயகர் ஆலயம்
பள்ளிக்கூடங்கள்
Remove ads
மருத்துவமனைகள்
- அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
- கே.எம்.ஏ. மருத்துவமனை
- தினகரன் மருத்துவமனை
- மகேந்திரன் மருத்துவமனை
- பிரியதர்ஷினி சேகர் மருத்துவமனை
- எஸ். எம். ஏ மருத்துவமனை
- தாஜ் பல் மருத்துவமனை
- இர்பா பல் மருத்துவமனை
- சுகம் மெடிக்கல் சென்டர்
- பிரியா கிளினிக்
- ஹம்னா குழந்தைகள் மருத்துவமனை
- ஜமாலி மருத்துவமனை
- கிரஸென்ட் மருத்துவமனை
பல்துறை அரசு அலுவலகங்கள்
- பேரூராட்சி அலுவலகம்
- கிளை அஞ்சல் நிலையம்
- உதவி மின்செயற்பொறியாளர் அலுவலகம்
- கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம்
- வருவாய் ஆய்வாளர் அலுவலகம்
- கிளை நூலகம்
- பி.எஸ்.என்.எல் மின்னணுத்தொலைப்பேசி அலுவலகம்
- அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
சந்தை
ஒவ்வொரு வாரமும் சனிக் கிழமை பேருந்து நிலையம் அருகே உள்ள திடலில் வாரச்சந்தை நடைபெறுகிறது. அக்டோபர் 05, 2019 முதல் ஜமாலி நகர் பூங்கா அருகே நடைபெற்று வருகின்றது.
வங்கிகள்
- கனரா வங்கி
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
- பாரத ஸ்டேட் வங்கி
- ஆக்சிஸ் வங்கி
- திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி
- பாண்டியன் கிராம வங்கி
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி - ஊர் எல்லையில் (இருப்பு பென்னகோணம் ஊராட்சி)
தானியங்கி காசளிப்பு இயந்திரங்கள்
- கனரா வங்கி
- இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
- பாரத ஸ்டேட் வங்கி இரண்டு இடங்களில்
- ஆக்சிஸ் வங்கி
- இந்தியா ஒன் ஏ.டி.எம்
அரசியல்
இலப்பைக்குடிக்காடு குன்னம் தமிழ்நாடு சட்டமன்ற தொகுதியின் கீழ் உள்ள ஊராகும். மக்களவைத் தொகுதிகளில் சிதம்பரம் தொகுதியின் கீழ் வருகிறது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads