இலாமா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
லாமா (Llama) என்பது தென் அமெரிக்காவைச் சேர்ந்த ஒட்டக வகையைச் சேர்ந்த ஒரு விலங்கு. இவ்விலங்கானது பொதியேற்றிச் செல்ல ஆண்டீய மலைத்தொடரை ஒட்டி வாழும் இன்காக்கள் முதலான இனக்குழுக்களால் பயன்படுத்தப் படுகிறது. இவ்விலங்கு இன்று பணி விலங்காக சுமை ஏற்றிச் செல்லவும், இதன் மயிர், இறைச்சி ஆகியவற்றுக்காகவும் வளர்க்கப்படுகிறது.[1][2][3]
நன்கு வளர்ந்த லாமாவானது தலைப்பகுதி வரை ஐந்தரை அடி முதல் ஆறு அடி உயரம் இருக்கும். சராசரியாக 127 கிலோ முதல் 204 கிலோ எடை வரை இருக்கும். பிறந்த ஒட்டகக் கன்றுகள் ஒன்பது கிலோ முதல் 14 கிலோ வரை இருக்கும். லாமாக்கள் மந்தைகளாகக் கூடி வாழ்வன. பொதுவாக இவற்றின் மயிரிழையானது மென்மையாகவும் லனோனின் இல்லாமலும் இருக்கும். இவை புத்திசாலி விலங்குகளாகும். பல வேலைகளைச் சில முறை சொல்லிக்கொடுத்தவுடன் கற்றுக்கொண்டு செய்யும். பொதி சுமக்கும் லாமாக்கள் தங்கள் உடல் எடையில் 20-30% வரை தூக்கிக் கொண்டு பல மைல்கள் நடக்கவல்லன.
லாமாக்கள் வடஅமெரிக்காவின் நடுப்பகுதியில் உள்ள சமவெளிப்பகுதிகளில் 40 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியிருக்கலாம் எனக்கருதப்படுகிறது. இவை 3 மில்லியன் ஆண்டுகட்கு முன் தென் அமெரிக்காவுக்கும் ஆசியாவிற்கும் இடம்பெயர்ந்தன. பனியுகத்தின் முடிவில் இவை வடஅமெரிக்காவில் அழிந்துவிட்டன. 2007-ஆம் கணக்கெடுப்பின் படி தென்அமெரிக்காவில் 7 மில்லியன் லாமாக்களும் அல்ப்பாக்காக்களும் உள்ளன. ஐக்கிய அமெரிக்கா, கனடாவில் ஒரு இலட்சம் லாமாக்கள் உள்ளன. இவை தென்னமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை.
Remove ads
ஊடகங்கள்
- Camelidae
- கெச்சுவாச்சிறுமி-லாமா, கோசுக்கோ
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads