இலிம்பாங்

சரவாக் இலிம்பாங் மாவட்டத்தில் உள்ள நகரம். From Wikipedia, the free encyclopedia

இலிம்பாங்map
Remove ads

இலிம்பாங் (மலாய் மொழி: Limbang; ஆங்கிலம்: Limbang; சீனம்: 林梦) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில் இலிம்பாங் பிரிவு; இலிம்பாங் மாவட்டத்தில் அமைந்து உள்ள நகரமாகும். இது இலிம்பாங் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும்.

விரைவான உண்மைகள் இலிம்பாங் நகரம், நாடு ...

லிம்பாங் மாவட்டம்; புரூணை சுல்தானகத்தை இரண்டாகப் பிரிக்கின்றது. இலிம்பாங் நிலப்பகுதி, புரூணை சுல்தானகத்தால் ஆளப்பட்ட போது, அதை புரூணையின் "அரிசிக் கிண்ணம்" (Rice Bowl of Brunei) என்று அழைத்தார்கள்.

ஏனெனில் இலிம்பாங் மாவட்டம் புரூணைக்கு சவ்வரிசி மற்றும் அரிசியை வழங்கி வந்த ஒரு பெரிய விவசாயப் பகுதியாகும். இலிம்பாங்கின் பொருளாதார முக்கியத்துவமே, வெள்ளை ராஜா சார்லஸ் புரூக்கை இலிம்பாங்கைக் கைப்பற்றத் தூண்டியது.

Remove ads

நிலவியல்

Thumb
சரவாக் மாநிலத்தில் இலிம்பாங் மாவட்டத்தின் அமைவு. இந்த மாநிலம் புரூணை நாட்டை இரண்டாகப் பிரிக்கின்றது.
Thumb
இலிம்பாங் அருங்காட்சியகம்.

இலிம்பாங் பிரிவு புரூணை நாட்டை இரண்டாகப் பிரிக்கின்றது. இலிம்பாங் பிரிவின் மேற்கில், மேற்கு புரூணை மற்றும் இலிம்பாங் மாவட்டம்; லாவாசு மாவட்டங்களுக்கு நடுவில் தெம்புராங் மாவட்டம் அமைந்து உள்ளது.[1]

அதே நேரத்தில் இலிம்பாங் பிரிவின் லாவாசு மாவட்டமும்; தெம்புராங் மாவட்டமும்; மலேசியாவின் மற்றொரு மாநிலமான சபா மாநிலத்திற்கு இடையே அமைந்து உள்ளன.

இந்தப் புவியியல் சூழ்நிலையினால், சாலை வழியாக இலிம்பாங் பிரிவுக்குள் நுழைந்தாலும் அல்லது வெளியேறினாலும் குடியேற்றச் சோதனைகள் நடைபெறுகின்றன.

Remove ads

வரலாறு

1884-ஆம் ஆண்டில், புரூணை சுல்தானகத்தால் விதிக்கப்பட்ட உயர் வரியை எதிர்த்து இலிம்பாங் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். உண்மையில் இந்தக் கிளர்ச்சியின் பின்னணியில் இருந்தவர் வெள்ளை ராஜா சார்லசு புரூக்.

1885-ஆம் ஆண்டில், பெங்கீரான் தெமாங்கோங் பெங்கீரான் அனாக் ஆசிம் (Pengiran Temanggong Pengiran Anak Hashim) என்பவர் புரூணை சுல்தானாகப் பதவி ஏற்பதற்குத் தயாராக இருந்தார்.

லிம்பாங் மக்களின் கிளர்ச்சி

இலிம்பாங் மக்களின் கிளர்ச்சியை அவரால் அடக்க இயலவில்லை. இருப்பினும் சார்லசு புரூக்கின் உதவியை நாடினார். அப்போதும் கிளர்ச்சியை அடக்க இயலவில்லை.

பின்னர் லபுவானில் இருந்த பிரித்தானிய அரசத் தூதரகத்தின் (British Royal Consul) ஆளுநர் உதவியை நாடினார். கிளர்ச்சி ஒடுக்கப்பட்டது. பெங்கீரான் தெமாங்கோங் புரூணையின் சுல்தான் ஆனார். அவருடைய பெயர் சுல்தான் ஆசீம் சலீலுல் ஆலாம் அகமதின் (Sultan Hashim Jalilul Alam Aqamaddin) என்று மாற்றம் கண்டது.

புரூணை ஆதங்கம்

Thumb
பேரங்காடி.

17 மார்ச் 1890-இல், லிம்பாங் நிலப்பகுதி சரவாக் இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்று ராஜா சார்லஸ் புரூக் அறிவித்தார். அது சட்டப்படி தவறு என்று புரூணை அரசாங்கம் பிரித்தானிய அரசாங்கத்தின் உதவியை நாடியது. ஆனால் பலனில்லை. இந்த விசயத்தில் 130 ஆண்டுகளுக்குப் பிறகும் ஐக்கிய இராச்சியம் மௌனம் காத்து வருகிறது.

புரூணைக்குச் சொந்தமான லிம்பாங், வலுக் கட்டாயமாகவும் சட்ட விரோதமாகவும் எடுத்துச் செல்லப் பட்டதாக இன்றுவரை, புரூணை கூறி வருகிறது.

Remove ads

காலநிலை

இலிம்பாங் நகரம் வெப்பமண்டல மழைக்காட்டு காலநிலையைக் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் கனமான மழை பெய்கிறது.

மேலதிகத் தகவல்கள் தட்பவெப்ப நிலைத் தகவல், லிம்பாங், மாதம் ...
Remove ads

காட்சியகம்

இலிம்பாங் குடிநுழைவு, சுங்கத்துறை முத்திரைகளின் படங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads