இ. மயூரநாதன்
தமிழ் விக்கிப்பீடியாவின் முதல் இடைமுகத்தை உருவாக்கியவர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
இ. மயூரநாதன் (R. Mayooranathan) என்பவர் தமிழ் விக்கிப்பீடியாவின் முன்னோடியாவார். இவர் தமிழ் விக்கிப்பீடியாவில் 2003 நவம்பர் 20 ஆம் திகதி புகுபதிந்துள்ளார். அத்துடன் தமிழ் விக்கிப்பீடியாவை 2003, செப்டம்பர் 30 ஆம் திகதியே உருவாக்கும் முயற்சிகள் சிலரால் மேற்கொள்ளப்பட்ட போதும், தமிழ் விக்கிப்பீடியாவுக்கான முதல் இடைமுகத்தை உருவாக்கியவரும் இவரே ஆவார். ஆரம்பகாலங்களில் விக்கிப்பீடியாவில் பங்களிக்க முயன்றோர் ஒரு சில தொகுப்புகளுடன் மறைந்துவிட்ட நிலையிலும் இ. மயூரநாதன் தமிழரின் நலன் சார்ந்து இந்த கலைக்களஞ்சியத்தை வளர்க்கும் முயற்சியில் இடையறாது உழைத்து வருபவர் ஆவார்.[1] விக்கிப்பீடியாவின் சிறப்புகளில் ஒன்றான வரலாற்றுப் பக்கங்கள் இ. மயூரநாதனின் பங்களிப்புக்களை வரலாறாக காட்டிநிற்கின்றன. இவர் இலங்கை, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவராவர். ஐக்கிய அரபு இராச்சியத்தில், கட்டக்கலைஞராக தொழில் புரியும் இவர் யாழ் வைத்தீஸ்வரா வித்தியாலயத்தில் கல்வி கற்றவராவார்.
![]() | இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
![]() | இந்தக் கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்தக் கட்டுரையைத் திருத்தி உதவுங்கள் |
Remove ads
மயூரநாதனின் இணைவு
இ. மயூரநாதனின் முதல் தொகுப்பு 2003 நவம்பர் 20 ஆம் திகதி பதிவாகியு}}ள்ளது.[2] இவரால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான முதல் இடைமுகத்தோற்றம் 2003, நவம்பர் 25 ஆம் திகதி உருவாக்கப்பட்டுள்ளது.[3] அவர் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான இடைமுகத்தை வடிவமைத்தப்போதும், ஏற்கனவே பயனர்கள் செய்த தொகுத்தல் முயற்சிகளை அழிக்காமல் அப்படியே விட்டிருந்துள்ளார். அவை அந்த இடைமுகத் தோற்றத்தின் அடிப்பாகத்தில் அப்படியே உள்ளன. அத்துடன் தமிழ் விக்கிப்பீடியாவின் தோற்றத்தின் போது மற்றவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளிலும் இவர் முன்மாதிரியாக நின்று,அவற்றை முறையாக நெறிப்படுத்தி வந்திருப்பதை, தமிழ் விக்கிப்பீடியாவின் வரலாற்றுப் பக்கங்கள் சாட்சிகளாய் காட்டுகின்றன. தற்போது விக்கிப்பீடியாவில் பயனர்கள் 2,48,089 பேர் புகுபதிகை செய்துள்ளனர். அதில் முன்னிலையில் நின்று பங்களிக்கும் சிறப்புப் பயனர்கள் 689 உள்ளனர். இப்போதைக்கு அனைத்து பயனரின் பங்களிப்புடன் தமிழ் விக்கிப்பீடியாவில் காணப்படும் கட்டுரைகளின் எண்ணிக்கை 1,77,568 ஆகும். இதில் சிறப்பு என்னவென்றால் 18% வீதமானக் கட்டுரைகள் இ.மயூரநாதனுடையதாகவே இருப்பதே. 2015 ஆம் ஆண்டு எண்ணிக்கையின் படி மயூரநாதன் எழுதியக் கட்டுரைகள் 4000 -ஐயும் கடந்துச் செல்கிறது. மயூரநாதன் எழுதும் கட்டுரைகள், எண்ணிக்கையை அதிகரிப்பதனை மட்டுமே நோக்காக கொள்ளாமல் காத்திரமானவைகளாகவும் உள்ளன.[4]
இவரது பயனர் பக்கத்தின் முதல் தொகுப்பு 2003 நவம்பர் 25 ஆம் திகதி பதிவாகியுள்ளது.[5] இவரது பயனர் பேச்சு பக்கத்தின் தொகுப்பு 2005 மே 2 ஆம் திகதி பதிவாகியுள்ளது.[6]
Remove ads
விருதுகள்

- 2015 - தமிழ் விக்கிப்பீடியாவின் உருவாக்கத்தின் முன்னோடியாகத் திகழ்ந்தமைக்காக இவருக்குக் கனடியத் தமிழ் இலக்கியத் தோட்டமும், ரொறொன்ரோ பல்கலைக்கழகத் தென்னாசியக் கழகமும் இணைந்து 2015 ஆம் ஆண்டுக்குரிய இயல் விருதினை வழங்கின.[7]
- 2016 - ஆனந்த விகடன் "டாப் 10" மனிதர்கள் விருது[8]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads