ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2023
தமிழகத்தில் இடைத்தேர்தல் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் 2023 பெப்ரவரி 27 அன்று நடைபெற்றது. இந்திய தேசிய காங்கிரசு சார்பில் 2021 தேர்தலில் வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா மாரடைப்பால் இறந்ததை அடுத்து இடைத்தேர்தல் நடைபெற்றன. இதில் இம்முறையும் திமுக கூட்டணி சார்பில் காங்கிரசுக் கட்சி மீண்டும் போட்டியிட்டது. திருமகன் ஈவேரா முன்னாள் தமிழக காங்கிரசு தலைவர் ஈ. வெ. கி. ச. இளங்கோவனின் மகன் ஆவார்.[1][2]
தலைமைத் தேர்தல் ஆணையர் இராசீவ் குமார், டெல்லியில் நிருபர்களைச் சந்தித்து மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபைத் தேர்தல்களுடன் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் பெப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார்.
Remove ads
வேட்பாளர்கள்
அதிமுக யாருக்கு என்பதில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் பன்னீர் செல்வத்துக்கும் இடையே நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் வழக்கு நிலுவையிலிருப்பதால் அதிமுக எடப்பாடி அணியின் சார்பில் தென்னரசு போட்டியிட்டார்.[4][5] பன்னீர் செல்வம் அணியின் சார்பில் செந்தில் முருகன் போட்டியிட்டார் [6][7] இரட்டை இலை சின்னத்தை பெற அதிமுகவின் எடப்பாடி அணி உச்சநீதிமன்றத்தை நாடியதில் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு எந்த வேட்பாளருக்கு உள்ளதோ அதை அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் பெற்று தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி இரட்டை இலை சின்னத்தை இத்தேர்தலுக்கு பெறுமாறு உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்தது [8][9]
பன்னீர் தரப்பில் செந்தில் முருகன் வேட்பாளராக தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்திருந்தார். அவரின் வேட்பு மனுவை பன்னீர் தரப்பு திரும்பப்பெறுவதாக அறிவித்தது, அவரின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்டது .[10][11] எடப்பாடி தலைமையிலான அதிமுக தரப்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தென்னரசு பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்தது. அதனால் அவருக்கு அதிமுக சார்பாக போட்டியிட இரட்டை இலை சின்னம் கிடைத்தது. இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்குவதற்கான ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திட தமிழ்மகன் உசேனுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியது.[12]
2021 தேர்தலில் அதிமுக கூட்டணி சார்பில் தமிழ் மாநில காங்கிரசு போட்டியிட்டது.
அதிமுக தேசிய சனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்டது.
2021 தேர்தலைப் போலவே கூட்டணி இல்லாமல் நாம் தமிழர் கட்சி போட்டியிட்டது.
2021 தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்திருந்த பாமக இத்தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆதரவில்லை என்று அறிவித்தது.[13]
காங்கிரசு வேட்பாளராக ஈ. வெ. கி. ச. இளங்கோவன் போட்டியிட்டார் [14]
கூட்டணி இல்லாமல் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக அதன் மகளிர் பாசறை துணைச் செயலாளார் மேனகா அறிவிக்கப்பட்டார்.[15] தேமுதிக சார்பில் ஆனந்த் என்பவர் வேட்பாளராக போட்டியிட்டார். அமமுக சார்பில் சிவபிரசாந்த் என்பவர் போட்டியிட்டார்.[16] மக்கள் நீதி மய்யம் போட்டியிடாமல் திமுக கூட்டணியின் காங்கிரசு வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தது [17] ஒபிஎஸ் அணி வேட்பாளரும் அமமுக வேட்பாளரும் வாபஸ் பெற்று விட்டார்கள்.
அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியதைத் தொடர்ந்து, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப்போவது இல்லை என்று டிடிவி தினகரன் அறிவித்தார்.[18]
Remove ads
2021இல் பெற்ற வாக்குகள்
2023 இடைத்தேர்தலில் பெற்ற வாக்குகள்
Remove ads
புதிய தேர்தல் உத்தி (ஈரோடு கிழக்கு பார்முலா அல்லது பட்டி பார்முலா)
ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் தி.மு.க சார்பில் ஒரு பணிமனை அமைத்துள்ளனர். அங்கு தினமும் காலை 7 மணி முதல் உணவு வழங்கப்படுகிறது. வீடுகளில் பெரிதாக யாரும் சமைப்பதில்லை. பின்பு பட்டியில் கால்நடைகளை அடைப்பது போல அடைத்து அங்கேயே மூன்று வேளையும் உணவு வழங்கப்படுகிறது, கொண்டாட்டத்திற்கு திரைப்படங்களை போடுகின்றனர். முடிந்து இரவு வீட்டுக்குச்செல்கையில் ரூ500 பணம் தருகின்றனர். 2009 திருமங்கலம் பார்முலா போன்று புதிதாக இந்த இடைத்தேர்தலுக்கு என்று திமுக அறிமுகப்படுத்திய இந்த உத்தியை ஈரோடு பார்முலா என்றும் பட்டி பார்முலா என்றும் அழைக்கின்றனர் . இந்த முறை மூலம் எதிர்கட்சியினர் வாக்கு கேட்டு வந்தால் எவரும் வீட்டில் இருக்கமாட்டார்கள், எதிர்கட்சி கூட்டங்களுக்கும் மக்கள் செல்லாமல் அங்கு கூட்டம் குறைவாக இருக்கும் [19][20][21]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads