நாம் தமிழர் கட்சி

தமிழின தேசியவாதக் கொள்கை கொண்ட இந்திய அரசியல் கட்சி From Wikipedia, the free encyclopedia

நாம் தமிழர் கட்சி
Remove ads

நாம் தமிழர் கட்சி தமிழ்த் தேசிய, ஈழப் போராட்ட ஆதரவு உடைய,[4][5] தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் செயல்படும் ஓர் அரசியல் கட்சி ஆகும்.[6] [7].[8] இந்தக் கட்சி 2010 மே 18 அன்று சீமானால் தொடங்கப்பட்டது. தினத்தந்தி நாளிதழின் நிறுவனர் சி.பா.ஆதித்தனார் நடத்தி வந்த "நாம் தமிழர் இயக்கத்தின்" தொடர்ச்சியே சீமானால் ஆரம்பிக்கப்பட்ட கட்சி என அறியப்படுகிறது.[9]

Thumb
நாம் தமிழர் கட்சித் தலைமை அலுவலக முகப்பு
விரைவான உண்மைகள் நாம் தமிழர் கட்சி, சுருக்கக்குறி ...

இக்கட்சி தமிழ்நாட்டிலும் புதுச்சேரியில் காணப்படுகிறது. 2009 மே 18 ஆம் தேதி இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், இலங்கை இராணுவத்திற்கும் நடைபெற்ற போர் முடிந்துவிட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தது. அந்தப் போரில் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர், இதையடுத்து அதை தொடர்ந்த ஓராண்டில் "நாம் தமிழர் கட்சி" தமிழ்த் தேசியக் கொள்கைகளைப் பறைசாற்றிக்கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

Remove ads

கட்சியின் கொள்கைகள்

தமிழின மீட்சி, ஈழத்தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு, மாநிலத் தன்னுரிமை, தமிழை வாழவைப்பது, தமிழனை ஆள வைப்பது, இயற்கைக்கு உகந்த வகையில் பெரும்பான்மை மக்களுக்கேற்ற அறிவியல் கண்டுபிடிப்புகளை வளர்த்தெடுப்பது, தொழில் நுட்பக்கல்வியை ஊக்குவிப்பது, மகளிருக்குச் சமபங்கு அளிப்பது, தமிழ்வழியில் கற்றோருக்கே தமிழகத்தில் வேலைவாய்ப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது இக்கட்சியின் கொள்கைகளாகும்.[10][11] [12][13][14]

2016 சட்டமன்றத் தேர்தல்

Thumb
தமிழ்நாட்டுக் கொடி

2016 ஆம் ஆண்டிலிருந்துதான் நாம் தமிழர் கட்சி தேர்தல்களில் போட்டியிட ஆரம்பித்தது. இதற்கு முந்தைய 2011 சட்டமன்ற தேர்தல் மற்றும் 2014 மக்களவை தேர்தல்களில் போட்டியிடவில்லை. 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 4,58,104 வாக்குகளுடன், சதவிகித அடிப்படையில் 1.07% வாக்குகளைப் பெற்று ஒன்பதாமிடம் வந்தது.[15][16][17][18]

2017 டாக்டர் இராதாகிருட்டிணன் நகர் இடைத்தேர்தல்

டாக்டர் இராதாகிருட்டிணன் நகர் இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டு நாம் தமிழர் கட்சி சார்பாக கலைக்கோட்டுதயம் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இந்த இடைத்தேர்தலில் 3802 வாக்குகள் பெற்று 2.15% சதவிகிதத்துடன் நாம் தமிழர் கட்சி நான்காவது இடம் பெற்றது.[19][20][21][22][23]

கட்சியின் சின்னம்

2019 ஆம் ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாற்பது தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து அதற்கானச் சின்னத்தை ஒதுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தை அணுகியது. ஆனால் 2016 சட்டமன்றத் தேர்தலில் வழங்கப்பட்ட 'இரட்டை மெழுகுவர்த்தி' சின்னம் மறுக்கப்பட்டது.[24]அதனை மேகாலாயாவிலுள்ள ஒரு மாநிலக் கட்சி தங்களுக்கான அங்கீகரிக்கப்பட்டச் சின்னமாகப் பெற்றுவிட்டது ௭னக் கூறி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் மறுத்தது. பிறகு தேர்தல் ஆணையத்தின் சின்னப்பட்டியலில் புதிதாகச் சேர்க்கப்பட்ட விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சி கோரியதால், அதனை ஒதுக்கினார்கள்.[25] ஆனால் அச்சின்னத்தை வாக்குப்பதிவு ௭ந்திரத்தில் அச்சிடுகிறபோது தெளிவற்றதாக, மிகவும் மங்கலானதாகப் பொறித்து இருட்டடிப்பு செய்ததாக இக்கட்சி குற்றஞ்சாட்டியது. இது குறித்து முறையிட உயர்நீதிமன்றத்தையும், உச்ச நீதிமன்றத்தையும் நாம் தமிழர் கட்சி அணுகியது.[26]

2024 இந்தியப் பொதுத் தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சி மைக் சின்னம் வழங்கப்பட்டடுள்ளது. இத்தேர்தலில் 8% வாக்குகளுக்கு மேல் பெற்றதால் 2025 ஜனவரி 10 இல் அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தது.[27] மாநிலக் கட்சியாக தேர்தல் ஆணையத்தின் ஏற்பை பெற்றதால் கரும்பு விவசாயி சின்னம் மற்றொரு கட்சிக்கு வழங்கப்பட்டு விட்டதால் ஏர்க் கலப்பையுடன் கூடிய விவசாயி சின்னத்தை மே 10, 2025 அன்று தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.[28][29] [30]

Remove ads

2019 நாடாளுமன்றத் தேர்தல்

ஏப்ரல் மாதம் 18 அன்று நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது. தமிழகம், புதுவையிலுள்ள 40 தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 19 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் 23.03.2019 அன்று சென்னை, மயிலாப்பூர் மாங்கொல்லை திடலில் நடைபெற்றது.[31] இதில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் 20 பெண் வேட்பாளர்கள் 20 ஆண் வேட்பாளர்கள் ௭ன இருபாலருக்கும் சரிபாதி இடம்கொடுத்து தமிழகமெங்கும் பரப்புரை செய்தார் சீமான்.

நீலகிரி மக்களவைத் தொகுதி பெண் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. மேலும் வேலூர் மக்களவை தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டது. வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் ஆகத்து மாதம் 5 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு 26,995 வாக்குகளைப் பெற்றது.

Remove ads

22 தொகுதி இடைத்தேர்தல்-2019

18 தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதியும், 4 தொகுதி இடைத்தேர்தல் மே மாதம் 19 ஆம் தேதியும் நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிட்டது. இதில் ஆண், பெண் வேட்பாளர்களை சரிபாதி தொகுதிகளில் போட்டியிட வைத்து பரப்புரை செய்தார் சீமான்.[32][33]

2021 சட்டமன்றத் தேர்தல்

தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டது. 2021 மார்ச்சு 7 அன்று சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கட்சியின் 234 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் சீமான் அறிமுகம் செய்து வைத்தார். சென்னை திருவொற்றியூர் தொகுதியில் சீமான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆண் வேட்பாளர்கள் 117 பேர், பெண் வேட்பாளர்கள் 117 பேர் என மொத்தம் 234 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.[34][35]புதுச்சேரியிலும் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர். 14 ஆண்; 14 பெண் வேட்பாளர்கள் என 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

Remove ads

2024 நாடாளுமன்றத் தேர்தல்

2024 இந்தியப் பொதுத் தேர்தலில் இக்கட்சி சார்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நாற்பது நாடாளுமன்ற தொகுதிகளில் 20 பெண் வேட்பாளர்கள் 20 ஆண் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.[36] இந்த தேர்தலில் மொத்தமாக 32 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை நாம் தமிழர் கட்சி பெற்றுள்ளது. 12 தொகுதிகளில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது. 5 தொகுதிகளில் மூன்றாவது இடத்தைப் பெற்றது. சிவகங்கை தொகுதியில் அக்கட்சி வேட்பாளர் எழிலரசி 1,63,412 வாக்குகளுடன் அதிகபட்ச வாக்குகளைப் பெற்றுள்ளார்.[37] இந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 8.19% வாக்குகளை பெற்று மாநிலக் கட்சி என்ற அங்கீகாரத்தைப் பெறுவதற்கான தகுதியை எட்டியுள்ளது. [38][39]

Remove ads

கட்சியின் வளர்ச்சி

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, தேர்தல் ...

இதனையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads