உடற்கூறாய்வு

From Wikipedia, the free encyclopedia

உடற்கூறாய்வு
Remove ads

உடற்கூறாய்வு (Vivisection; இலத்தீன் vivus 'உயிருடன்' மற்றும் sectio 'வெட்டுதல்') என்பது ஒரு உயிருள்ள உயிரினத்தின் மீது, பொதுவாக மத்திய நரம்பு மண்டலத்தைக் கொண்ட விலங்குகள் மீது, அதன் உயிருள்ள உட்புற அமைப்பைப் பார்ப்பதற்காக நடத்தப்படும் அறுவைச் சிகிச்சை ஆகும். விலங்குப் பரிசோதனையை எதிர்ப்போரால்[1] இந்தச் சொல்லாக்கமானது உயிருள்ள விலங்குகள் மீதான அறிவியல் பரிசோதனைகளைப் பரவலாகக் குறிக்கும்[2][3][4] ஒரு இழிவுச் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது.[5] இதன் காரணமாகவே இந்தச் சொல் விலங்குப் பரிசோதனையை நிகழ்த்தும் அறிவியலாளர்களால் அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது.[3][6] உயிருள்ள உருப்புகளை எடுக்கும் வகையிலான மனித உடற்கூறாய்வு சில இடங்களில் கொடூரமாக தண்டிக்கும் நோக்குடன் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

Thumb
அறுவை சிகிச்சை மருத்துவத்திற்குப் பயிற்சியளிக்க வேண்டி மயக்கமூட்டப்பட்டு அறுக்கப்படும் ஒரு பன்றி
Thumb
எலிகள் விலங்குப் பரிசோதனைகளுக்கு அதிக அளவில் பயன்படுத்தப்படும் பாலூட்டி வகையாகும். இதுபோன்ற ஆராய்ச்சிகள் உடற்கூறாய்வு என்றழைக்கப்படுகின்றன.
Remove ads

இவற்றையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads