உதயேந்திரம்
தமிழ்நாட்டின் திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
உதயேந்திரம் (ஆங்கிலம்:Uthayendram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பத்தூர் மாவட்டத்தின், வாணியம்பாடி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
இப்பேரூராட்சி அருகில் வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் நகராட்சிகள் அமைந்துள்ளது. வாணியம்பாடியில் தோல் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது. எனவே இப்பேரூராட்சியில் உள்ள பொது மக்கள் 50% பேர் தோல் தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகிறார்கள். 30% பேர் வேளாண்மை செய்கின்றனர்.
Remove ads
அமைவிடம்
மாவட்டத் தலைமையிடமான வேலூரிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ள உதயேந்திரம் பேரூராட்சிக்கு அருகில் அமைந்த தொடருந்து நிலையம் 3 கி.மீ. தொலைவில் உள்ள வாணியம்பாடியில் உள்ளது. இதன் வடக்கில் ஆம்பூர் 18 கி.மீ.; தெற்கில் திருப்பத்தூர் 26 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
8 சகி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 61 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி வாணியம்பாடி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,062 வீடுகளும், 13,837 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 83.90% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1021 பெண்கள் வீதம் உள்ளனர்.[4]
தொழில்
ஒரு காலத்தில் உதயேந்திர மக்கள் பாலாற்றின் வளத்தில் வாழ்ந்தவர்கள். 19 ஆம் மற்றும் 20 ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியர் பண ஆதிக்கத்தில் தோல் பதனிடும் தொழிலால் இவர்கள் ஓரளவு பணம் சம்பாதித்தாலும், அந்த பகுதியில் நீரும், நிலமும் கெட்டதுதான் மிச்சம். இதிலிருன்து இன்னும் மீளமுடியவில்லை. இன்த தோல் பத்னிடும் தொழில் வேலூர் மாவட்ட பாலாற்று பகுதியை விட்டுவைக்கவில்லை. உதயேந்திரம், வாணியம்பாடி, ஆம்பூர், பேரணாம்பட்டு, இராணிப்பேட்டை, வாலாஜா என்று ஒரு 150 கிலோ மீட்டருக்கு நிலமும் நீரும் கெட்டுப்போயுள்ளது.
உதயேந்திரத்தில் கிறித்தவர்கள் பெரும்பான்மை வகிக்கின்றனர். இங்கு ஆதிதிராவிடரும், தெலுங்கு பேசும் மக்களும், இசுலாமியரும் வசிக்கின்றனர்.
தோல் பதனிடும் தொழில் தவிர காலனி தைக்கும் தொழிலில் ஒரு சில பெண்கள் ஈடுபட்டுள்ளனர். அதைதவிர மிக முக்கியமான தொழிலாக தச்சுத் தொழில் செய்வோர் ஏராளம்.
Remove ads
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads