உத்மூர்த்தியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
உத்மூர்த்தியா (உருசியம்: Удму́ртия, ஒ.பெ Udmurtiya, பஒஅ: [ʊˈdmurtʲɪjə]) அல்லது உத்மூர்த் குடியரசு (உருசியம்: Удму́ртская Pеспу́блика, ஒ.பெ Udmurtskaya Respublika, பஒஅ: [ʊˈdmurtskəjə rʲɪsˈpublʲɪkə]) என்பது உருசியக் குடியரசுக்களுள் ஒன்று. இழெவ்ஸ்க் இதன் தலைநகர். 2010ம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி இக்குடியரசின் மக்கள்தொகை: 15,21,420.
Remove ads
வரலாறு
உத்மூர்த் மக்களின் பண்பாடு மற்றும் பாரம்பரிய விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில் நவம்பர் 4, 1920ல் வோத்ஸ்க் தன்னாட்சி ஓப்லாஸ்த் உருவாக்கப்பட்டது;[11] ஜனவரி 1, 1932ல் உத்மூர்த் தன்னாட்சி ஓப்லாஸ்த் எனப் பெயர் மாற்றப்பட்டது. டிசம்பர் 28, 1934ல் [11] இது மறுசீரமைக்கப்பட்டு உத்மூர்த் தன்னாட்சி சோவியத் சமத்துவக் குடியரசு என உருவானது. சோவியத் ஒன்றியம் பிளவுபட்டது முதல் இது உத்மூர்த் குடியரசு என அழைக்கப்படுகின்றது. இரண்டாம் உலகப் போர்ச் சூழலில் உக்ரைன் மற்றும் ஐரோப்பிய மேற்கு எல்லைப் பகுதிகளிலிருந்த பல தொழிற்சாலைகள் உத்மூர்த்தியாவிற்கு கொண்டுவரப்பட்டன.
Remove ads
புவியியல்
கிழக்கு ஐரோப்பியச் சமவேளியின் கிழக்கு பகுதியில் காம ஆற்றுக்கும் வியாத்கா ஆற்றுக்கும் இடையே அமைந்துள்ள இக்குடியரசில் செப்த்ஸா ஆறு, ஈழ் ஆறு, காம ஆறு, கில்மெஸ் ஆறு, சீவ ஆறு முதலிய ஆறுகள் பாய்கின்றன.
இயற்கை வளங்கள்
இக்குடியரசு பெற்றோலிய எண்ணெய், கரி, கனிம நீர் முதலிய இயற்கை வளங்களைக் கொண்டுள்ளது. 2002ன் கணிப்பின்படி இங்கு 820 மில்லியன் டன் எண்ணெய் இருப்பு உள்ளது. ஆண்டுதோறும் 7 மில்லியன் டன் எண்ணெய் எடுக்கப்படுகின்றது. பெரும்பாலும் ஊசியிலைக் காடுகளைக் கொண்டுள்ள இக்குடியரசின் வனப்பகுதி 40%ஆக உள்ளது
காலநிலை
சராசரி சனவரி வெப்பநிலை: −14.5 °C (5.9 °F)
சராசரி சூலை மாத வெப்பநிலை: +18.3 °C (64.9 °F)
ஆண்டு சராசரி மழைபொழிவு 400–600 மிமீ
Remove ads
மக்கள் வகைப்பாடு
2008ம் ஆண்டு வரை சரிவடைந்து வந்த இக்குடியரசின் மக்கள்தொகை 2010ம் ஆண்டு கணக்கின்படி சற்று ஏற்றமடைந்துள்ளது. இச்சரிவு நகர்ப்புரத்தில் பெருமளவில் இருந்தது.
பிறப்பு இறப்பு விவரங்கள்
மூலம்[12]
இனக் குழுக்கள்
2010ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி[6] உத்மூர்த் குடியரசின் மக்கள்தொகையில் 62.2% உருசியர்கள் 28% பாரம்பரிய உத்மூர்த் இனமக்கள் 6.7% தாத்தார்கள் 0.6% உக்ரேனியர்கள் 0.6% மாரி மக்கள் எனப் பலவகையான இனக்குழுக்கள் உள்ளனர். உலகிலுள்ள உத்மூர்த் மக்கள் தொகையில் மூன்றில் இரு பங்கினர் இக்குடியரசில் வாழ்கின்றனர்.[13]
Remove ads
பண்பாடு
உத்மூர்த்தியாவின் வரலாற்றையும் பண்பாட்டையும் எடுத்துரைக்கும் வகையில் எட்டு தொழில்முறை திரையரங்குகளும் ஒரு பாரிய இசைக்குழு சமூகமும் பத்திற்கும் மேற்பட்ட மாநில மற்றும் பொது அருங்காட்சியகங்களும் உள்ளன. சராபுல் வரலாறு மற்றும் பண்பாட்டு அருங்காட்சியகம், வோத்கின்ஸ்க்கிலுள்ள சாய்க்கோவ்ஸ்கி அருங்காட்சியகம் முதலியன குறிப்பிடத்தகுந்தன. பழைமையான ஆயுத அருங்காட்சியகங்களில் ஒன்றும் நவம்பர் 2004 ல் அர்ப்பணிக்கப்பட்ட கலாஷ்னிக்கவ் அருங்காட்சியகமும் இழெவ்ஸ்க்கில் உள்ளது. சோவியத் ஒன்றியம் உடைந்தபின் உரால் பகுதி மக்களால் பண்பாட்டு வருநிகழ்வியம் (Ethnofuturism) என்ற பண்பாட்டு இயக்கம் பரிணமித்துள்ளது.[14]
சமயம்
2012ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, உத்மூர்த் மக்கள் தொகையில் 33.1% உருசிய மரபுவழித் திருச்சபையையும் 5% இணைப்பில்லாத பொதுவான கிறித்துவத்தையும் 2% பிற மரபுவழி திருச்சபையையும் 4% இசுலாத்தையும் 2% ஸ்லாவிய நாட்டுப்புறச்சமயம் அல்லது உத்மூர்த் நாட்டுப்புறச்சமயத்தையும் 1% சீர்திருத்தத் திருச்சபை யையும் 1% பழைய நம்பிக்கையையும் பின்பற்றுகின்றனர். மேலும் மக்கள்தொகையில் 29% பேர் இறை நம்பிக்கை கொண்ட ஆனால் சமயப்பற்றற்றவர்கள், 19% நாத்திகர்கள் 3.9% சமயம் குறிப்பிட விரும்பாதோர் அல்லது பிற சமயங்களை பின்பற்றுவோர்கள்.
Remove ads
அரசியல்
உத்மூர்த் குடியரசின் தலைவர் உருசியக் குடியரசுத் தலைவரால் தேர்ந்தெடுக்கப்படுகின்றார். பிப்ரவரி 2004 இல் அலெக்சாண்டர் சலவ்யோவ் உத்மூர்த் குடியரசின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
கல்வி
இக்குடியரசில் உயர்கல்வி பெற உத்மூர்த் மாநில பல்கலைக்கழகம் மற்றும் இழெவ்ஸ்க் மாநில தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவை உள்ளன.
சான்றுகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads